Breaking News
recent

வருடம் முழுவதும் உம்றா, அனுமதி வழங்க திட்டம்.!


அடுத்த ஆண்டில் உம்றா வழிபாட்டு காலத்தை ஆண்டு முழுவதும் திறந்து வைக்க சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்றா அமைச்சு திட்டமிட்டிருப்பதாக அந்த அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

“ஹஜ் பருவத்தை தவிர்த்து ஆண்டு முழுவதும் உம்றா கடமைக்கு விசா வழங்கப்படவுள்ளது” என்று மக்கா வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கான தேசிய குழுவின் தலைவர் அப்துல்லாஹ் காதி குறிப்பிட்டுள்ளார்.

ரமழான் 15 (ஜுன் 20) தொடக்கம் உம்றா விசா விநியோகிப்பதை அமைச்சு நிறுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

எனினும் வெளிநாடுகளில் இருக்கும் சவூதி இராஜதந்திர அலுவலகங்கள், ஏற்கனவே விசா குறிப்பு எண்கள் வழங்கப்பட்டோர்களுக்கு விசா அனுமதி வழங்கி வருவதாக குறிப்பிட்டாா்.

தரவுகளின்படி கடந்த ஆண்டு எட்டப்பட்ட 6.4 மில்லியனை விடவும் இந்த ஆண்டில் உம்றா விசா ஏழு வீதம் உயர்ந்துள்ளது. “இந்த ஆண்டில் அமைச்சு திட்டமிட்டிருக்கும் எட்டு மில்லியன் உம்றா யாத்திரிகர்களின் எண்ணிக்கையை விடவும் இது குறைவானது” என்று காதி தெரிவித்தார். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.