Breaking News
recent

கம்யூட்டர் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.!


நவீன காலத்தில் மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்டவற்றுள் மொபைல்போன், கம்ப்யூட்டர் ஆகியவை முக்கிய இடம்பெறும். சிறியவர் முதல் பெரியவர் வரை செல்போன் பயன்படுத்துவது 

என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. ஓரு குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றனரோ அத்தனை பேருக்கும் ஆளுக்கொரு செல்போன் என்பதும் கட்டாயமாகிவிட்டது. இதேபோல் தான் கம்யூட்டரின் பயன்பாடும். 

வீட்டுக்கு ஒரு கம்யூட்டர் என்பதே தற்போதைய நிலை. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வீட்டில் மட்டுமல்ல, பள்ளி செல்லும் மாணவர்களும் தற்போது கம்யூட்டரை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மேலும் சில அலுவலக பணிகளை வீட்டில் முடிப்பதற்கு வசதியாகவும் பெரும்பாலான வீடுகளில் கம்ப்பயூட்டர் வாங்கிவைத்துள்ளனர். நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட பொருட்களுள் கம்ப்யூட்டரும் தற்போது இடம்பிடித்துவிட்டது. 

பணிகளை விரைந்து முடிப்பது உள்பட பல்வேறு துறைகளிலும் கம்ப்யூட்டரின் பங்கு அளப்பிற்கரியது. அதேசமயம் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல கம்யூட்டரால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றனவோ, அதே அளவு தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பதால் கண்குறைபாடு பிரச்னை ஏற்படுவதாக கண்மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

தொடர்ந்து கம்ப்யூட்டரிலேயே முடங்கி இருப்பவர்களுக்கு மனஅழுத்த பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது கம்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவரும் நிலையில் இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரமும் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்கிற பிரச்னை வருவதாக கண் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் அறிகுறிகள் : 


     கண்கள் வறண்டு போவது
     கண்ணீரே இல்லாமல் போய், அடிக்கடி தலைவலி,
     கண்கள் இழுக்கின்ற மாதிரியான உணர்வு
     கண்கள் துடிப்பது
     கண் எரிச்சல்
     பார்வை மங்கினமாதிரி உணர்வு
     தூக்கமின்மை


கழுத்து மற்றும் தோள்பட்டை வலி ஏற்படுவது போன்றவை கம்யூட்டர் விஷன் சின்ட்ரோமின் அறிகுறிகளாகும். 

கம்ப்யூட்டர் திரையில் உள்ள ஒளிக்கதிர் கண்களில் உள்ள ஈரப்பதத்தை உளறச்செய்து விடுகிறது. இதனால் சிறிது நேரத்தில்  நேரடியாக திரையின் ஒளிக்கதிர் கண்களை பாதிப்பதின் மூலம் கண்களில் இருக்கும் சிறிய நரம்புகளும் பாதிக்கப்படுகிறது. இதனால் மேற்கூறிய பிரச்னைகள் ஏற்படுகிறது. 

தவிர்ப்பதற்கான வழிமுறைகள்: 

சிவிஎஸ் எனப்படும் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க நமது பார்வையை 20-30 வினாடிகள் கம்யூட்டர் திரையில் இருந்து விலக்கி, வேறு ஒரு பொருளை பார்க்க வேண்டும். இந்த பயிற்சி மூலமாக சற்று இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். உள்ளங்கைகளை சூடு பறக்க தேய்த்து மூடின கண்கள் மேல் வைத்து எடுக்கலாம், கண்கள் வறண்டு போனால் கண் மருவத்துவரை பார்த்து கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளை பயன்படுத்தலாம். கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண்ணாடிகள் கம்யூட்டருக்கு சரிப்பட்டு வராது. 

கம்ப்யூட்டர் பணிகளுக்காக ஸ்பெஷல் கோட்டிங்குடன் கூடிய பிரத்யேக கண்ணாடிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதுமட்டுமல்லாமல் நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் செலவிடுபவர்களுக்கு முதுகுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி எரிச்சலான உணர்வு, சிறுநீர் அடக்குதல், பசியின்மை உள்ளிட்டவையும்  தற்போது அதிகரித்து வருவதோடு மனஅழுத்ததுக்கு உள்ளாகும் அபாயமும் நிலவுகிறது. எனவே அளவோடு கம்ப்யூட்டரை பயன்படுத்தி கண்பார்வை பிரச்னை, மனஅழுத்தத்துக்கு உள்ளாவதில் இருந்து தவிர்க்கலாம். 

கம்ப்யூட்டர் முன் தியானம் 

மணிக்கணக்கில்  கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட அதிகம்  வாய்ப்புள்ளது. இந்த மன அழுத்தத்தை  போக்க தியானம் செய்வது சிறந்ததாகும்.  தியானத்தால் உற்சாகம் , மகிழ்ச்சி, அமைதியான மன நிலை ஏற்படுகிறது.  


கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போதே கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம்  தியானம் செய்யலாம்.  கம்ப்யூட்டர் முன் அமர்ந்துகொண்டு ஆழமான, சுத்தமான  சுவாசத்தை இழுத்து, மெதுவாக வெளியே விடவேண்டும். 

சிறிது நேரம் இவ்வாறு  தொடர்ந்து செய்வது நல்ல பலனை தரும். தியானம் செய்த பின்னர்  புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள். இந்த பயிற்சியை எங்கு  வேண்டுமானாலும்  எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். 

குழந்தைகளை பழக்காதீர்கள்: 


கேம்ஸ் என்ற பெயரில் குழந்தைகள் கம்ப்யூட்டருக்கு அடிமையாவதை ஊக்குவிக்காதீர்கள்.விளையாட்டு மட்டுமின்றி விஷயங்களையும் குழந்தைகள் தெரிந்து கொள்ளக்கூடும்.


விளையாட்டிலேயே மனம் லயித்துவிடும்போது படிப்பின் கவனமின்மை ஏற்படலாம்.

விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தால் பசியில்லை என கூறுவார்கள். இதனால் உடலளவில் சோர்ந்துவிடுவார்கள். 


அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேரடியாக குழந்தைகளுக்கு விளக்கி கூறுங்கள்.குறிப்பிட நேரம் மட்டுமே பயன்படுத்த அனுமதியுங்கள்.

கம்ப்யூட்டரை எவ்வாறு வைக்க வேண்டும்:
கம்ப்யூட்டர் திரை 10 முதல் 20 டிகிரி மேல் நோக்கி இருக்க வேண்டும். 
கம்ப்யூட்டருக்கும் கண்களுக்கும் இடையே 20 முதல் 26 டிகிரி இடைவெளி இருக்க வேண்டும்.


சரியான உயரத்தில் மேஜை, சரியான உயரத்தில் கீபோர்டு இருக்க வேண்டும். அதாவது கை 90 டிகிரி சாய்ந்து இருக்குமாறு அமைந்து இருக்க வேண்டும். 


20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 நொடிகள் கம்யூட்டரில் இருந்து உங்கள் பார்வையை விலக்கி கொள்ள வேண்டும்.


பார்வை குறைபாடு கண்ணாடியிலேயே ஸ்பெஷல் கோட்டிங் சேர்த்து ஒரே கண்ணாடியாக அணிந்து கொள்ளலாம். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.