Breaking News
recent

அக்லக் வீட்டிலிருந்து மாட்டிறைச்சி எதுவும் நாங்கள் கைப்பற்றவில்லை: விசாரணை அதிகாரி உறுதி.!


உ.பி மாநிலத்தில் தாத்ரி என்னுமிடத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கும்பல் ஒன்றால் கொல்லப்பட்ட அக்லக் என்பவர் கொலை விசாரணையில் கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சி, அவரது வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

வீட்டில் மாட்டு இறைச்சியை பதுக்கி வைத்து சாப்பிட்டார் என்று பரவிய வதந்தியை தொடர்ந்து கடந்தாண்டு இந்தியாவில் ஒரு கும்பல் ஒன்று அக்லக் என்பவரை அடித்துக் கொன்றது.

இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக அவரது வீட்டிலிருந்து மாட்டு இறைச்சி எதையும் நாங்கள் கைப்பற்றவில்லை என போலீஸ் பிபிசியிடம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தர பிரதேசத்தில், 50 வயதான முகமது அக்லக் மற்றும் அவரது 20 வயது மகன் அவர்களது கிராமத்தில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டார்.

அந்த பகுதியில் இருந்த உள்ளூர் கோயில் ஒன்றில், அக்லக் குடும்பத்தார் மாட்டு இறைச்சி உண்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர், அந்த பகுதியிலிருந்து, அதாவது அக்லக் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தள்ளி இறைச்சித் துண்டுகளின் மாதிரிகளை கைப்பற்றியதாக விசாரணை அதிகாரி தெளிவுப்படுத்தியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட இறைச்சி மாதிரிகள் மாடு அல்லது கன்றின் இறைச்சியாக இருக்கலாம் என தடவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது.
உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் பசுமாடுகள் பெரும்பாலான இந்து மக்களால் புனிதமாக கருதப்படுகிறது.

மேலும், பசுமாடுகள், கன்றுகள் மற்றும் காளைகளை கொல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், எருமை இறைச்சியை வெட்டவோ, உண்ணவோ தடை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





நன்றி-bbc
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.