Breaking News
recent

தமிழ்நாட்டு சட்டசபையில் ஒலித்த, அல்குர்ஆன் வசனங்கள்.!


இறைவனின் பெயரால் தொடங்கி குர்ஆன் வசனத்தை ஓதி முதல் உரையை 21.06.2016 தொடங்கிய தமிமுன் அன்சாரி....!!

சட்டமன்றத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தனது முதல் உரையை இறைவனின் பெயரால் தொடங்கி குர்ஆன் வசனத்தை ஓதி தனது முதல் உரையை தொடங்கினார்.

முன்னதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை சட்டசபை மாடத்தில் அமர வைக்க ஸ்பெஷல் பாஸ்களை வாங்கிக் கொடுத்தார்.

சரியாக மதியம் 1.52 மணிக்கு தமிமுன் அன்சாரிக்கு வாய்ப்பு கிடைத்தது.

இறைவனின் பெயரைக் கூறி உரையை தொடங்கினார். எல்லோருக்கும் தமிழில் சலாம் சொன்னார். பிறகு குர்ஆன் வசனத்தை ஓதிகாட்டி உரையை தொடர்ந்தார்.

குர்ஆன் வசனத்தை கேட்டு அவை உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ந்து மேஜையை பலமாக தட்ட ஆரம்பித்து அவையில் உற்சாகத்தை ஏற்படுத்தினர்.

பின்பு அழுத்தமாகவும், ஆழமாகவும், வேகமாகவும் ஆற்றிய உரையை பல கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர். ஆழமான கருத்துகளை கூர்ந்து கவனித்தனர். பார்வையாளர் பகுதியில் இருந்தவர்களும், அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் பார்த்து கொண்டே இருந்தனர்.

சபாநாயகர்,நேரமில்லை என்றபோது அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களும் சேர்ந்து அவருக்கு நேரம் கொடுங்கள் என சொன்னதுதான் ஆச்சர்யமாக இருந்தது.

அமைச்சர்களும் கைதட்டி வரவேற்றனர். அவை நேரம், மணி இரண்டை கடந்த போது சபாநாயகர் மீண்டும் நேரமின்மையை சுட்டிக்காட்டியதும் 2:05 க்கு உரையை பாதியில் நிறுத்தினார்.

பிறகு தயார் செய்திருந்த முழு உரையை சபாநாயகர் அலுவலகத்திற்கு அனுப்பினார்.

அமைச்சர்கள் O.பன்னீர் செல்வம், நன்னிலம் காமராஜ், O.S. மணியன், S.P. வேலுமணி உள்ளிட்டவர்களும்
ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் தமிமுன் அன்சாரியிடம் சிறப்பாக பேசியதாக கை குலுக்கி வெகுவாக பாராட்டினர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.