Breaking News
recent

விமான கட்டணத்தில் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கும் ஏர் இந்தியா.!


தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, மாணவர்களுக்கு உள்நாட்டு பயணக் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகையை இன்று அறிவித்துள்ளது.

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் வேறு பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்காகவோ, நுழைவுத் தேர்வுகளுக்காகவோ பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

இதற்காக மாணவர்களுக்கு உள்நாட்டு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இந்த கட்டண தள்ளுபடி திட்டத்தின்கீழ் உள்நாட்டில் 1000 கி.மீ. தொலைவுக்குள் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களிடம் 3500 ரூபாய் மட்டுமே கட்டணமாக (வரிகள் சேர்த்து) வசூலிக்கப்படும். 1000 கி.மீ. தொலைவுக்கு அதிகமாக பயணம் செய்வோருக்கு 5500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம்தேதி வரையிலான பயணங்களுக்கு இந்த தள்ளுபடி சலுகைக்கான டிக்கெட்டுகளை பெறலாம் என்றும், இன்று முதல் ஜூலை 31-ம் தேதி வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதேபோல் பட்ஜெட் விமானமான கோஏர் நிறுவனமும் கடந்த வாரம் மாணவர்களுக்கு கட்டண சலுகை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.