Breaking News
recent

ஆதார் எண்ணுடன் சாதி மற்றும் இருப்பிட சான்றுகளை இணைக்க வேண்டும்.!


ஆதார் எண்ணுடன் ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றுகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆதார் எண் இணைக்கப்பட்ட சாதி, இருப்பிடச் சான்றுகளை ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு 60 நாட்களுக்குள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

சாதி, இருப்பிடச் சான்றுகள் பெறுவது,  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் கல்வி உதவித் தொகை பெறுவது ஆகியவற்றில் கால தாமதம் ஏற்படுவதாக பெருமளவில் புகார்கள் வரும் நிலையில், மத்திய அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 

இந்த சான்றுகளை வழங்குவதில் சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து 60 நாட்களுக்குள் உரிய சான்றுகளை வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

இருப்பிட மற்றும் சாதிச் சான்றுகளை வழங்குவது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இந்த சான்றிதழ்களை 5ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பில் வழங்குவதா என்பதை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், இதற்கான உரிய ஆவணங்களை பெறுவது பள்ளி முதல்வரின் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் எண்ணுக்கு சேகரிக்கப்படும் தகவல்கள் குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது சாதி விவரங்களை அதனுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.