Breaking News
recent

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்திற்கெதிரான பிரச்சாரங்களை உடைத்தெறியும் முஸ்லிம் பெண்கள்.!


இஸ்லாமியர்களின் தனியார் சட்டத்தினை உடைத்து பொது சிவில் சட்டத்தினை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று பல காலமாக சங் பரிவார அமைப்புகள் முயற்சித்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே.

அந்த வகையில் சமீபத்தில் பாரதிய முஸ்லிம் மகிலா அந்தோலன் மற்றும் இன்ன பிற முஸ்லிம் பேர்களில் உள்ள லெட்டர் பேட் அமைப்புகள் இஸ்லாமிய ஆண்/பெண்களின் உரிமையான தலாக்கினை அரசு தடை செய்ய வேண்டும் என்று மோடி தலைமையிலான பா.ஜ.க அரசிற்கு வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளன.

இவர்களின் இத்தகைய கோரிக்கைகளையும் அவர்கள் இஸ்லாமிய தனியார் சட்டத்தினால் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று கட்டி எழுப்ப முனையும் இஸ்லாமிய எதிர்ப்பு பிம்பத்தினையும் உடைத்தெரிந்துள்ளனர் இஸ்லாமிய மார்க்க அறிவில் தேர்ச்சி பெற்ற பெண்கள்.

டில்லியில் இன்று நடந்த கூட்டத்தில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வர தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று முஸ்லிம் தனியார் சட்டவாரிய பெண் உறுப்பினர்கள் கூறியுள்ளனர். சில அன்தோலன்களும் லட்டர் பேட் அமைப்புகளும் முஸ்லிம் தனியார் சட்டத்தினை ஒழிப்பதற்கு கருவிகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பெண் உறுப்பினர்கள், இந்தியாவில் அமலில் இருக்கும் முஸ்லிம் தனியார் சட்டங்களில் எந்தவித திருத்தங்களும் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் என்றும் அது பெண்களுக்கு சம உரிமை வழங்குவதுடன் அவர்களின் கண்ணியத்தையும் சுய மரியாதையையும் வழங்குகின்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இன்னும் இத்தகைய அமைப்புகளின் செய்திகளை ஊத்தி பெரிதாக்கும் ஊடகத்திடமும், முஸ்லிம் பெண்களின் நலன்களுக்கு போராடுகிறோம் என்று கூறும் இத்தகைய அமைப்புகளிடமும் இந்தியாவில் பெண்களுக்கு நிலவி வரும் மோசமான நிலை குறித்து ஏன் முஸ்லிம்கள் மட்டும் குறிவைக்கப்படுகின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

வரதட்சணை கொடுமை குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நம் இந்திய சமுதாயம் முழுவதிலும் பரவியிருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சரியத் சட்டத்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்படும் இந்த வேலையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பெண் உறுப்பினர்கள் ஊடகங்களிடம், போலியான முஸ்லிம் பெண் அமைப்புகள் சார்புநிலை கொண்ட ஊடங்கங்கள் மூலம் செய்யும் போலியான பிரச்சாரத்தை உடைக்கவே இந்த சந்திப்பை ஏற்படுத்தியதாக கூறியுள்ளனர்.

டாக்டர் அஸ்மா ஜெஹ்ரா, “விவாரத்து விகிதம் முஸ்லிம் சமுதாயத்தில் தான் மிகக் குறைந்த அளவில் இருக்கின்றது என்று கூறியுள்ளார். இன்னும் மும்பை, கொல்கத்தா, டில்லி, சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் விவாகரத்து விகிதாச்சாரம் கடந்த ஐந்து வருடங்களில் 350% அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார். 

இத்தகைய வழக்குகளை கவனிப்பதற்கான பெங்களூரில் இருந்த மூன்று குடும்ப நீதிமன்றம் தற்பொழுது ஆறாக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இன்னும் சில விவாகரத்து வழக்குகளில் திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து கோரும் தம்பதிகளும் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

நிலைமை இப்படி இருக்க ஏன் முஸ்லிம்கள் மட்டும் விவாகரத்திற்காக குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சில போலியான முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் 92% முஸ்லிம் பெண்கள் தலாக்கிற்கு எதிராக உள்ளனர் என்பது போன்று போலியான தகவல்களை வைத்து அறிக்கையை தயார் செய்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

இத்தகைய போலி அறிக்கைகளையும் அதனை ஊதி பெரிதாக்கும் சார்பு நிலை ஊடங்கங்களும் முஸ்லிம் பெண்களுக்கு உள்ள நிஜ பிரச்சனைகள் குறித்து சிறிதும் கவலை கொள்வதில்லையே ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்லாமிய மார்கத்தில் விவாகரத்து என்பது விரும்பத்தகாத ஒரு செயல். ஒரு திருமணத்தில் இருவருக்கு மத்தியில் அதிருப்திகள் பெருகி வாழ இயலாத சூழ்நிலைகள் ஏற்படும் நிலையில் அந்த உறவை விட்டு விலக பாதுகாப்பான வழிமுறை தான் விவாகரத்து.

இத்தகைய விவாகரத்துகள் எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்து குரானிலும் நபிகளாரின் வாழ்க்கை வழிமுறைகளிலும் வழிகாட்டிகள் இருக்கின்றது. ஒரே அமர்வில் மும்முறை தலாக் கூறி மன முறிவு செய்வது இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளபடாத ஒன்று என்றும் ஊடகங்கள் இதனை அளவுக்கு மீறி பெரிது படுத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தில் முழு நம்பிக்கை உள்ளது. அதனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்கள் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.