Breaking News
recent

வளைகுடா நாடுகளுக்குத் தினசரி புதிய விமான சேவை: ஜெட் ஏர்வேஸ்.!


இந்தியாவில் பயணிகள் விமானச் சேவை வழங்குவதில் பல நிறுவனங்கள் போட்டுப்போட்டுக் கொண்டு இருந்தாலும், தரமான மற்றும் ஸ்திரமான சேவை வழங்குவதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்று. 

இந்நிலையில் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்திய பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு ஜெட் ஏர்வேஸ், இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளின் சில பகுதிகளுக்குத் தினசரி விமானச் சேவையை அறிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் 
திங்கட்கிழமை ஜெட் ஏர்வேஸ் அறிவித்தபடி வரும் ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்குப் புதிய வழித்தடத்தில் தினசரி பயணிகள் விமானச் சேவை அறிமுகம் செய்துள்ளது.

ஷார்ஜா 
இதன் படி வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஹைதராபாத் டூ தம்மம் (Dammam) மற்றும் மங்களூர் டூ ஷார்ஜா ஆகிய வழித்தடங்களில் புதிதாகத் தினசரி சேவையைத் துவங்கத் திட்டமிட்டு அதற்கான டிக்கெட் விற்பனையும் துவக்கியுள்ளது.

கவ்ரங் ஷெட்டி 
அரேபிய வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பயணிகளும் மிகச் சிறந்த சேவை மற்றும் புதிய வழித்தடத்தில் புதிய சேவை வழங்குவதில் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முழுநேர தலைவர் கவ்ரங் ஷெட்டி கூறினார்

இணைப்பும்.. நட்புறவும்.. 
இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் மத்தியில் இணைப்பும் மேம்பட்டு வரும் இத்தகைய சூழ்நிலையில், இருநாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகம் மற்றும் நட்புறவை மேம்படுத்த இத்தகைய திட்டங்கள் மற்றும் சேவைகள் மிகவும் பயன்படும் எனவும் கவ்ரங் ஷெட்டி கூறினார்.


மங்களூரு 
ஜெட் ஏர்வேஸ் மங்களூரில் இருந்து ஷார்ஜா மட்டும் அல்லாமல் அபுதாபி மற்றும் துபாய் போன்ற முக்கிய வர்த்தக நகரங்களுக்கும் தினசரி விமானச் சேவையை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

32 லட்சம் பயணிகள் 
2016ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாத காலகட்டத்தில் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் மத்தியில் சுமார் 32 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.

640 விமானங்கள் 
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ஒரு வாரத்திற்கு 640 முறை வளைகுடா நாடுகளுக்குப் பயணிகள் விமானச் சேவை அளித்து வருகிறது. மேலும் இப்புதிய வழித்தடத்தில் தனது புதிய போயிங் 737-800 ரகப் புதிய விமானத்தைப் பயன்படுத்த உள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.