Breaking News
recent

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி காலமானார்.!


உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 74. அமெரிக்காவின் அரிஜோனா பீனிக்ஸில் உள்ள மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்'க்ளேவாக குத்துச்சண்டை  களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான்.

தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு.  "பட்டாம்பூச்சியை போல மிதந்திடுங்கள் ; தேனீயைப்போல கொட்டிவிடுங்கள் !" என்கிற அவரின் வாசகம் அமெரிக்கா முழுக்க எதிரொலித்தது.  "I'M THE GREATEST !" என்று அவர் சொன்ன பொழுது ரசிகர்களும் "ஆமாம் ! ஆமாம் "என்று கொண்டாடினார்கள்.


இரண்டுமுறை ஹெவி வெய்ட் சாம்பியனாக இருந்தவருக்கு ஒரு சோதனை வந்தது -சரியாக சொல்வதென்றால் பற்பல சோதனைகளின் உச்சகட்டம் எனலாம். இவர் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் பெற்று வந்தவுடன் இனவெறி காரணமாக வரவேற்க கூட ஆளில்லை; நிறவெறி-வெய்ட்டர் கூட மதிக்கவில்லை. கடுப்போடு அந்த பதக்கத்தை நதியில் வீசிவிட்டு நடந்தார்.

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின் கலந்துகொண்ட போட்டியில் அவரைமுகமது அலி என அழைக்க எதிர் போட்டியாளர் மறுத்து விட்டார் ; கூட்டமும் ஏளனம் செய்தது. ஆனாலும்,உலக சாம்பியன் ஆனார். வியட்நாம் போரில் இளைஞர்களை ஈடுபட வைக்க   அமெரிக்கா கட்டாய ராணுவ சேவையை கொண்டு வந்து அதில் இவரையும் சேர சொன்னது,"அப்பாவி மக்களை கொல்லும் போரில் கலந்துகொள்ள மாட்டேன் !"என இவர் சொன்னது பெரிய அலையை உண்டு பண்ணியது.

காத்திருந்த அமெரிக்க அரசு அவரை குத்துசண்டையில் கலந்து கொள்வதற்கான லைசன்சை நீக்கியது; மூன்று வருடம் வனவாசம்.பின் பல்வேறு போராட்டத்துக்கு பின் மீண்டு வந்தால் தோல்வியே சந்திக்காத அவர் தோற்றுப்போனார். அவ்வளவு தான் என நாடே நகைத்தது.

அப்பொழுது தான் உலக சாம்பியன்ஷிப் வந்தது ,ஒரே ஒருவரை தவிர பதக்கம் இழந்து பலகாலம் கழித்து சாம்பியன்ஷிப்பை யாரும் வென்றது இல்லை ;மூன்று வருட வனவாசம் வேறு. ஆனாலும் வென்று காண்பித்தார் முகமது அலி ! அவர் தலையில் வாங்கிய அடிகள் அவரை முடக்கிபோட்டது -பர்கின்சன் சிண்ட்ரோம் அவரை பாதித்து முடக்கிபோட்டது.ஆனாலும்,அவர் பல்வேறு நிதிதிரட்டல்கள் மூலம்  எளியவர்களுக்கு உதவிவந்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.