Breaking News
recent

விமானம் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு – விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு.!


விமானம் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

விமான பயணம் சொகுசானது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குறுகிய நேரத்தில் சென்று விடலாம். 

என்றாலும் சாலையில் போக்குவரத்து நெரிசல் காலங்களில் விமான நிலையங்களுக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

சரியான நேரத்துக்கு விமான நிலையத்துக்கு சென்றாலும் சில சமயம் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

 இதேபோல் விமானங்களும் பல்வேறு காரணங்களால் தாமதமாக வரும் நிலை ஏற்படுகிறது. 

இது போன்ற அசவுகரியங்களால் விமானப் பயணிகள் தவிப்புக்கு ஆளாகிறார்கள்.

இதனால் முக்கியமான வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்றவற்றில் பங்கேற்க முடியாமல் போகிறது.

இது போன்ற சமயங்களில் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பெரும் தொகை கழித்துக் கொள்ளப்படுகிறது.

 இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய நடை முறையை கையாள முடிவு செய்துள்ளது.

அதன்படி குறிப்பிட்ட நேரத்துக்கு விமான நிலையத்துக்கு சென்ற பின்பும் விமான பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டாலோ, 

அல்லது விமானம் புறப்படுவதில் அல்லது வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டால் விமானப் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. 

அதன்படி ரூ.7500 விமான டிக்கெட்டில் பயண நேரம் 2 மணிக்கு மேல் நீடித்தால் இதனால் ஏற்படும் தாமதத்துக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்.

மேலும் டிக்கெட்டை ரத்து செய்யும் போது அதற்கான கழிவுத் தொகையை குறைக்கவும் முடிவு செய்துள்ளது. 

விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.