Breaking News
recent

ரமலான் காலத்தில் பகல் நேரத்தில் உணவகத்தை திறந்த இந்தோனேஷிய உணவகம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை; குவியும் நன்கொடை.!


இந்தோனேஷியாவில் ரமலான் காலத்தில், உணவகம் ஒன்றில் அதிகாரிகள் சோதனையிட்டதை அடுத்து உணவகத்தின் உரிமையாளருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அவர் விற்பனை செய்ய வைத்திருந்த உணவுகளை பறிமுதல் செய்யும்போது, அதன் அருகில் கவலையுடன் நின்று கொண்டிருந்த அந்த பெண்மணியின் வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டதையடுத்து, அவருக்கு இந்த நன்கொடை பணம் குவிந்ததுள்ளது.
ரமலான் காலத்தில் பகல் நேரத்தில் உணவகத்தை திறக்கக்கூடாது என்ற உள்ளூர் சட்ட விதியை மீறிய குற்றத்திற்காக இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெரும்பாலான இந்தோனேஷிய முஸ்லிம் மக்கள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் இடைப்பட்ட காலத்தில் நோன்பு இருப்பார்கள் ஆனால் சில உணவகங்கள் நோன்பு இல்லாதவர்களுக்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.