Breaking News
recent

ரமலான் பத்திலே மக்கா நகரின் 80 % ஹோட்டல் அறைகள் முன்பதிவு.!


புனித ரமழான் மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குள்  மக்கா நகரில் உள்ள பிரதான  ஹோட்டல்களில் 80 வீதமான அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கா நகரில் உள்ள பிரதான ஹோட்டல்களில் 155000 அறைகள் உள்ளதாக குறிப்பிடப்படும் அதேவேளை இதில் 124000 அறைகள் பதிவுசெய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அறைகள் வாடகை பெறுமதி சுமார் ஒரு பில்லியன் சவுதி ரியாலை தாண்டும் எனவும் வழமையான கட்டணங்களை விட தற்போது கட்டணங்கள் அதிகரித்துள்ளதாகவும் 

சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை
ரமழான் கடைசி பத்தில் மக்காவின் பிரதான ஹோட்டல்கள் 100 % நிரம்பிவிடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.