Breaking News
recent

இந்தியாவில் 5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணிப் பெண் மரணம்.!


இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் மரணம் அடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், உலகம் முழுவது ஒரு ஆண்டிற்கு 5,29,000 பெண்கள் பிரசவத்தின் போது இறப்பதாகவும், இதில் 25.7 சதவீதம் அதாவது 1,36,000 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழப்பு ஏற்படுகிறது. 

மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரசவத்தின் போது ஏற்படும் இரத்தப்போக்கால் உயிரிழக்கிறார்கள்.

 குழந்தை பிறந்த 24 மணிநேரத்திற்குள் சுமார் 500 மி.லிட்டர் அல்லது 1000 மி.லிட்டர் ரத்தம் இழப்பதே பெரும்பாலும் ஏற்படும் சிக்கல்.

2011-13ம் ஆண்டுகளில் இறப்பு விகிதம் என்பது ஒரு லட்சம் பிறப்புகளுக்கு சுமார் 167 இறப்புகளாக உள்ளது. 

120 கோடி  மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மட்டும் 1.2 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படும்போது வெறும் 90 லட்சம் ரத்தம் மட்டுமே பெறப்படுகிறது.

 இதனால் இந்தியாவில் 25 சதவீதம் பற்றாக்குறை ஏற்படுகிறது. ரத்த மேலாண்மை குறித்து போதிய விழிப்பு உணர்வு இல்லாததே இதற்கு காரணம். 

இது போன்ற இறப்புகளை தடுக்க வேண்டுமானால், ரத்தத் தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும். இதுகுறித்து போதிய விழிப்பு உணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

அதிகபட்ச இறப்புகளை பதிவு செய்வது அஸ்ஸாம் மாநிலம். குறைந்தபட்சம் கேரளா மாநிலம் என்று கூறப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.