Breaking News
recent

ரூ.444-க்கு விமான பயணம்! SpiceJet விமான சேவை அறிவிப்பு.!


முதல் விமான பயணத்திற்கு திட்டமிட்டு வருகிறீர்களா? 500 ரூபாய்க்கும் குறைவாக டிக்கெட் விற்பனை சலுகை வழங்குகிறது SpiceJet விமான சேவை.

"மான்சூன் போனான்வா சேல்" என்ற பெயரில் மிக குறைந்த விலையில் விமான டிக்கெட்டை வழங்க முன்வந்துள்ளது SpiceJet விமான சேவை. உள்நாட்டில் ஒரு வழி பயணத்திற்கு அடிப்படை கட்டணம் ரூ.444/- மட்டுமே.


ஜம்மு - ஸ்ரீநகர், அஹமதாபாத்-மும்பை, மும்பை-கோவா, டெல்லி-டெஹராடூன், டெல்லி-அம்ரிட்சர் ஆகிய வழித்தடங்களில் இந்த சேவை செல்லுபடியாகும். ஜீன் 26 ஆம் தேதி வரை இந்த குறைந்த விலை டிக்கெட் விற்பனை இருக்கும்.  

ஜீலை 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பயணம் செய்ய, இந்த திட்டத்தில் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

இதே போல் Indigo விமான சேவையும் குறைந்த விலை டிக்கெட் விற்பனை சலுகையை தொடங்கியுள்ளது. உள்நாட்டு பயணத்துக்கான டிக்கெட்டை ரூ.789-க்கு பெறலாம்.

மேலும், ஜெட் ஏர்வேஸ் ஜீலை 8 முதல் செப்டம்பர் 30 வரை உள்நாட்டு பயணம் செய்வோருக்கு, டிக்கெட்டில் 20 சதவீத சலுகையை வழங்குகிறது. இதற்கான டிக்கெட்டை பெற ஜீன் 20, 23 தேதிகளில் முன்பதிவு செய்ய வேண்டும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.