Breaking News
recent

பிளஸ் 2: அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புப் பதிவுக்கு ஏற்பாடு.!


பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கான பதிவுப் பணி மேற்கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதனால் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்ததற்கான அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளன்று தவறாமல் கொண்டு வரவேண்டும்.
மேலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்தோர் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியவில்லையென்றால், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும்.
வருகிற 20-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரையில் வேலைவாய்ப்புப் பதிவுப் பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெற இருக்கிறது.
இதில், குறிப்பாக பதிவு தொடங்கிய 15 நாள்களுக்கும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக அளிக்கப்பட உள்ளது.
அதேபோல், https:tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம். எனவே இந்த வாய்ப்பை பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.