Breaking News
recent

குஜராத் ‘இன அழிப்பு’ : 24 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு.!


சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவில் இடம்பெற்ற மிக மோசமான இன அழிப்பு வன்முறையாகக் கருதப்படும் 2002 குஜராத் கலவரத்தில் 24 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர்.

ஆயிரத்துக்கும் அதிகமான உயிரழப்புகள் ஏற்பட்ட குறித்த கலவரத்தின் முக்கிய புள்ளியெனக் கருதப்படும் விஷ்வ ஹிந்து பரிசத் இயக்கத்தின் தலைவர் ஒருவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை தண்டனை குறித்த தீர்ப்பு வழங்கப்படும என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் குஜராத் முதல்வராக இருந்த தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இச்சம்பவத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நிலையில் தற்போது இவ்விசாரணைகள் முடிவுற்று குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குல்பர்க் இன அழிப்பென அறியப்படும் இச்சம்பவத்தில் 790 முஸ்லிம்கள் மற்றும் 250 இந்துக்களும் இறந்ததாக இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் 2500க்கும் அதிகமான முஸ்லிம்கள் இங்கு கொல்லப்பட்டதாக வேறு தகவல் மூலங்கள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.