Breaking News
recent

1.10 கோடி சம்பளத்தில் கூகுல் நிறுவனத்தில் வேலை பெற்ற கொல்கத்தா எஞ்சினியரிங் மாணவர் ஹபீப் அஹ்மத்.!


ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் இறுதியாண்டு கம்பியூட்டர் சைன்ஸ் படிக்கும் அபிஃப் அகமத், கூகிள் நிறுவனத்தில் வருடத்திற்கு 1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார். 

இதே மாநிலத்தில் நாடியா, கிருஷ்ணாநகர் பகுதியில் விசித்து வரும் அபிஃப் அகமத் தனது கல்லூரி படிப்பின் இறுதி முடிவுகளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். முடிவுகள் வெளியான கையோடு அபிஃப் அகமத் கூகிள் நிறுவன பணியில் சேர உள்ளார்.

1.10 கோடி ரூபாய் சம்பளம் 

ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தலைவர் சமித்தா பட்டாச்சாரியா கூறுகையில், அபிஃப் அகமத் கூகிள் நிறுவனத்தில் வருடத்திற்கு 1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார். இவரது பணி சிங்கப்பூரில் இருக்கும் கூகிள் அலுவலகத்தில் இருந்து துவங்க உள்ளது என்று கூறினார்.

சிங்கப்பூர் 

பொதுவாக இந்தியாவில் இருந்து கூகிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்களுத்து தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அமெரிக்காவில் தான் பணியில் அமர்த்தப்படுவார்கள், ஆனால் அமெரிக்காவில் தற்போது விசா பிரச்சனை மிகப்பெரிய அளவில் உள்ளதால், பிற நாடுகளில் இருக்கும் அலுவலகங்களில் மாணவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

பிற நிறுவனங்கள் 

இப்பல்கலைகழத்தின் கம்பியூட்டர் சைன்ஸ் பிரிவில் சுமாப் 26 பேர் 28.5 லட்சம் முதல் 32.5 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளாதாகவும் சமித்தா பட்டாச்சாரியா கூறினார்.

விடா முயற்சி 

சகமாணவர்களை விட 3 மடங்கும் அதிக சம்பளத்துடன் கூகிள் நிறுவனத்தில் தனது முதல் வேலையை பெற்றதற்கு தனது விடா முயற்சியே முக்கிய காரணம் என்று அபிஃப் அகமத் கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.