Breaking News
recent

காஷ்மீரில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்.!(video)


அப்துல் ரசாக் என்கிற காஷ்மீரி முஸ்லீமுக்கும், திருமதி. ராஜேஷ் என்கிற காஷ்மீரி இந்து பண்டிட் பெண்ணுக்கும் இடையே நடந்தது. அதை அவரது கணவரே படம்பிடித்து அவரது முகநூலில் பதிந்திருக்கிறார்..!

பல ஆண்டுகளுக்கு முன் அந்த பெண்ணின் தந்தையிடம் அப்துல் ரஜாக் அவர்கள் 80 ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். போர் சூழலால் இடம் பெயர்ந்த அந்த குடும்பத்தில், அந்த பண்டிட் இறந்தும் விட்டார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து தனது சொந்த ஊருக்கு வந்த அந்த பெண்ணை கண்ட அப்துல் ரஜாக் தனது நண்பரான இந்து பண்டிட்டிடம் வாங்கிய பணத்தை அவரது மகளான திருமதி. ராஜேசிடம் திரும்ப தர வந்துள்ளார்.

அதை வாங்க மறுத்துவிட்டு அந்த பெண் அழத் தொடங்கி விட்டார். "நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை ஐயா" என்று அந்த பெண் கதற, "நீ எங்க வீட்டு புள்ளைம்மா" என்று இவர் அழ சூழ்ந்து நிற்பவர்கள் எல்லாம் அழத் தொடங்கி விட்டனர்.

அந்த நண்பர் மகளின் நெற்றியில் பாச முத்தத்தோடு, தந்தையின் முஸ்லீம் நண்பர் முகத்தில் இருந்து தனது தந்தை கண்ட மகிழ்ச்சியில் அந்த பெண் ஆனந்த கண்ணீர் வடிக்க அந்த போர் களம் சூழ் பூமி ஆனந்த கடலானது.

அந்த பேரழகு தேசத்தின் மக்களெல்லாம் அன்பும், பாசமும், நெகிழ்சியும் தான் கொண்டு வாழ்கிறார்கள். இந்த அதிகார வர்க்கம் தான் அவர்களுக்குள் பெரும் பகை இருப்பதாக பரப்புரை செய்து அப்பாவிகளை கொன்று குவிக்கிறது.

...நேசம் பாசத்திற்கு சாதி, மதமில்லை...

வீடியோவை காண கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

https://www.facebook.com/318795831612907/videos/644874519005035/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.