Breaking News
recent

ரயில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கா....விமானத்தில் போகும் யோகம் உங்களுக்கு இருக்கு.!


இந்தியாவில் அதிகாமாக பயன்படுத்தப்படும் போக்குவரத்து ரயில். இதுதான் பல நேரங்களில் சிக்கலாக்கிவிடுகிறது நம் பயணத்தை. அதாவது டிக்கெட் புக் செய்தால் சில நேரங்களில் பயணத்தின் இறுதி நேரம் வரை டிக்கெட் உறுதி ஆகாமல் இருக்கும். 
இது போன்ற சமயங்கள் மாற்று ஏற்பாடு ஏதாவது செய்ய முடியுமா என யோசிப்போம். ஆனால் இனிமேல் இந்த கவலை இல்லை. அதாவது ரயில் முதல் வகுப்பு டிக்கெட்  உறுதியாகவில்லை எனில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யலாம்.
ஐஆர்சிடிசியும், ஏர் இந்தியாவும் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அதன்படி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது முதல்கட்டமாக ராஜ்தானி ரயிலில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. 
முதல் வகுப்பு டிக்கெட் உறுதியாகவில்லை எனில் எந்தவிதமான கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். ஆனால் 2, 3 ம் வகுப்புகளில் டிக்கெட் கிடைக்கவில்லை எனில் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ரூ.1500 முதல் 2000 வரை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
டிக்கெட் வெயிட்டிங்கில் இருக்கும் பயணிகளின் விவரங்களை ஐஆர்சிடிசி, ஏர் இந்தியாவுக்கு அனுப்பும். விமானத்தில் செல்வதற்கு பயணி தயாராக இருந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் விமானத்தில் பயணம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும். 
ஆனால்  இது விமானத்தில் காலியாக இருக்கும் இருக்கைகளை பொருத்தது. 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் இது செயல்படுத்தப்படும்.
ஆகவே மக்களே இனி டிக்கெட் புக் செய்யும்போதே கன்ஃபார்ம் ஆகக்கூடாது என்று வெண்டிக்கொள்ளுங்கள் .ஊருக்கு விமானத்தில் போய் இறங்கலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.