Breaking News
recent

டொனால்டு டிரம்ப் விதிவிலக்கை நிராகரித்தார் லண்டன் மேயர் சாதிக்கான்.!


முஸ்லிம்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தனது கொள்கையில் விதிவிலக்கு அளிக்கப்படும் என்ற டொனால்டு டிரம்பின் சலுகையை லண்டன் மேயர் நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பல மாதங்களுக்கு முன் பிரச்சாரத்தை தொடங்கிய டொனால்டு டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய பேச்சு மூலம் பிரபலமானார். 

நான் அமெரிக்காவின் அதிபரானால் குறிப்பிட்ட காலத்திற்கு முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் டொனால்டு டிரம்ப் புதிதாக லண்டன் மேயராக தேர்தெடுக்கப்பட்டுள்ள சாதிக் பாஷாவுக்கு அமெரிக்கா வருவதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், லண்டன் மேயர் சாதிக் பாஷா டொனால்டு டிரம்பின் விதிவிலக்கை நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “இஸ்லாம் பற்றிய டொனால்ட் டிரம்பின் அறியாமை இருநாடுகளையும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளிவிடும். மையநீரோட்ட முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது அடிப்படைவாதிகளுக்கு சாதகமாக மாறிவிடும்.

டிரம்பும் அவருடன் இருப்பவர்களும் மேற்கத்திய கலாச்சாரம் மையநீரோட்ட இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் லண்டன் மக்கள் அதை தவறு என்று நிரூபித்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.