Breaking News
recent

முஸ்லிம்கள் குறித்து ஜேர்மானியர்கள், என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..?


பெரும்பாலான ஜேர்மானியர்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் கிடையாது என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

YouGov என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் 62 சதவீத ஜேர்மானியர்களுக்கு முஸ்லிம் நண்பர்களுடன் நட்புறவு கிடையாது.

இதில் 42 சதவீதம் ஜேர்மானியர்கள், உயர்நிலைப்பள்ளி பட்டப்படிப்பின் வாயிலாக முஸ்லிம் நண்பர்களை பெற்றுள்ளனர்.

28 சதவீதம் ஜேர்மானியர்களும் கிட்டத்தட்ட இதே நிலையில் உள்ளனர், குறிப்பாக 18 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் சமூக வட்டாரங்கள் முஸ்லிம் நபர்களோடு நட்புறவு கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஜேர்மனியில் வசிக்கும் பாதி இனத்தவர்களுக்கு முஸ்லிம் பற்றிய எவ்வித கருத்துக்களும் தெரியவில்லை, மேலும் ஐந்தில் ஒருவர் அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது என கூறியுள்ளனர்,

மேலும், 84 சதவீத இனத்தவர்கள், நாங்கள் ஒருபோதும் மசூதிக்குள் நுழைந்தது கிடையாது என கூறியுள்ளனர், ஆனால் இதற்கு எதிர்மாறாக 68 சதவீத முஸ்லிம்களுக்கு கிறிஸ்துவர்கள் பற்றி நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

ஜேர்மனியில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பார்கள், இதில் அதிகமானவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் போது குடியேறியவர்கள், இதனால் இவர்கள் விருந்தின தொழிலாளர்கள்(Guest Workers) என அழைக்கப்படுகின்றனர்.

சிலர் ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து அகதிகளாக குடியேறியவர்கள் ஆவர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.