Breaking News
recent

ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்.!


ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய நச்சுயியல் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எலிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்துள்ளதாக ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது 9 மணிநேரம் எலிகள் ஸ்மார்ட் போன்களில் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டன. சிலகாலம் சோதனைக்கு பிறகு, சாதாரண எலிகளை காட்டிலும் ஸ்மார்ட் போன் கதிர்வீச்சுக்கு உள்ளான எலிகளுக்கு புற்றுநோய்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அரிதான இதய புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோய் எலிகளுக்கு ஏற்பட்டதை ஆய்வறிஞர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். அதிக கதிர்வீச்சுக்கு உள்ளாகும் எலிகளுக்கு புற்றுநோய் கட்டிகள் அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. 


ஆய்வில் பங்கேற்ற எலிகளில் குறைவான எலிகளுக்கே இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்ட போதும் இதனை புறக்கணிக்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.