Breaking News
recent

உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை பாஸ்ட்புட் உணவால் உடலுக்கு தீமை ஏற்படும்.!


பாஸ்ட்புட் உணவு பொருட்களை உண்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். 

சிவகாசி பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பாதுகாப்பான உணவு முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. முதல்வர் விஷ்ணுராம், கல்லூரி டீன் மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிஎஸ்ஆர் கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைச்சாமி தலைமை வகித்தார்.

மாவட்ட உணவு பாதுகாப்பு கழக அதிகாரி கவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: பாகாப்பான உணவு முறைகளை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். 


இயற்கை உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. கலப்பட உணவு பொருட்கள், பாஸ்ட்புட் உணவு பொருட்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் பல்வேறு தீமைகள் உள்ளன. 

இந்த உணவு பொருட்களை உண்பதால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகலாம். மேலும் இந்த உணவு பொருட்களில் நச்சு தன்மை அதிகம் உள்ளதால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. பாஸ்ட் புட்களை உண்பதால் சிறுவயதிலேயே பலருக்கு தொற்று நோய்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. 

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்கள் நச்சு தன்மையுடன் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆதிமூலம் செய்திருந்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.