Breaking News
recent

மொத்தம் 5 லட்சத்து 34 ஆயிரத்து 115 வாக்காளர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில்.!


மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 34 ஆயிரத்து 115 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 2 லட்சத்து 63 ஆயிரத்து 064 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 2,71,026 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர்.

நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்து கொள்ள பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்களின் வாயிலாக பல்வேறு வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடும்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 2,59,420 ஆண் வாக்காளர்களும், 2,66,791 பெண் வாக்காளர்களும், 24 திருநங்கை வாக்காளர்களும் என ஆக மொத்தம் 5,26,235 வாக்காளர்கள் இருந்தனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதற்குப்பிறகு நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மூலம் மொத்தம் 8,604பேர் பெயர் சேர்ப்பதற்காக மனு அளித்திருந்தனர்.

இவர்களில் 8,142 நபர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி 3,778 ஆண் வாக்காளர்களும், 4,363 பெண் வாக்காளர்களும், 1 திருநங்கை வாக்காளரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் இறப்பு, இடமாறுதல், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம் பெற்றிருத்தல் உள்ளிட்ட காரணங்களால் 262 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது உள்ள இறுதி பட்டியலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147-பெரம்பலூர் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 003 ஆண் வாக்காளர்களும், 1 லடசத்து 42 ஆயிரத்து 327 பெண் வாக்காளர்களும், 14 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 389 வாக்காளர்களும் உள்ளனர்.

148- குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 061 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 654 பெண் வாக்காளர்களும், 11 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 726 வாக்காளர்களும் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2,63,064 ஆண் வாக்காளர்களும்;, 2,71,026 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 5,34,115 வாக்காளர்கள் உள்ளனர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.