Breaking News
recent

இந்தியாவில் 106 சதவீதம் மழை பெய்தாலும் குடிநீர் பஞ்சம் தீராது: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.!


இந்தியாவில் வரும் பருவ மழைக் காலத்தின் போது 106 சதவீதம் மழை பெய்தாலும், தண்ணீர் பஞ்சம் மட்டும் தீராது என்று ஒரு அதிர்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
அதாவது, இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் பருவ மழைக் காலத்தில் 106% அளவுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து லண்டனில் இருந்து இயங்கும் வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் பருவ மழை காலத்தில் போதிய மழை பெய்வது மட்டுமே குடிநீர் பஞ்சத்தை சரி செய்துவிடாது என்று கூறியுள்ளது.
அதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை தவறிவிட்டதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே, நூறு சதவீதம் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளபடி மழை பெய்தாலும், குடிநீர் பஞ்சம் தீராது என்று வாட்டர் எய்ட் இந்தியாவின் தலைவர் நித்யா ஜேகப் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான நதிகளும், அணைகளும் வறண்டு போயுள்ளது. கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும், பெரும்பாலான ஆற்றுப் படுகைகள் 75 சதவீதம் அளவுக்கு வறண்டுபோயிருப்பதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டு வீசிய கடுமையான வெயில், பருவ மழை தவறுதல் போன்ற காரணங்களில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலத்தடி நீர் மட்டம், நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெயில் அளவு போன்றவற்றால் மிக மோசமான நிலையை அடைந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.