Breaking News
recent

எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. – ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு.!


ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத்அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
சேலத்தில் நடந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்கள் பேசும் போது முஸ்லிம்களின் கொள்கையோடு மோதக்கூடிய பேச்சை வரம்புமீறி பேசியுள்ளார் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்க தகுந்தது மிகவும் கண்டனத்திற்குரியது
 இத்தகைய வாரத்தை எங்களது கொள்கைக்கு எதிரானது எலும்பில்லாத நாவுதானே எதுவேண்டுமானாலும் சொல்லலாம் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என்று எண்ணினால் அது மாபெரும் தவறு. எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது . 
திமுக நாகை நாகராஜன் அவர்களை கட்சியின் பொறுப்புகள்,மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும்.தமிழக அரசு திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் .
பாரத் மாதா விவகாரத்தில் “பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷமிட மறுப்பவர்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியுள்ளது. பாரத் மாதா கி ஜெய்’ சொல்லாதவர்களுக்கு இந்நாட்டில் தங்க உரிமை கிடையாது என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார். 
யோகா குரு? பாபா ராம்தேவ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இந்திய அரசியல் சாசனம் மட்டும் தடுக்காவிட்டால் பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிடாதவர்களின் தலைகளை வெட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.தொடர்ந்து தேசத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் விதமாக பல விஷமக்கருத்துக்களை பரப்பி வரும் தேச விரோதிகளை மத்திய அரசு உடனடியாக கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
பதான்கோட் தாக்குதல் தொடர்பான விசாரணையில் தன்சில் அஹமத் ஈடுபட்டு வந்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி தன்சில் அஹமத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டார். 
இந்த தாக்குதிலில் பலத்த சந்தேகம் வலுக்கின்றது இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து அதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை உலகிற்க்கிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
இப்படிக்கு
மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி
மாநில செய்தி தொடர்பாளர்
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.