Breaking News
recent

துபாயில் இலவச யோகா வகுப்புக்கள்.!


துபாயில் நமது இந்திய தூதரகம் இலவச யோகா வகுப்புகளை எல்லா சனிக்கிழமைகளில் காலை 9.30 - 10.30 வரை நடத்த உள்ளது. இவ்வகுப்பு 12 வாரங்கள் நடைபெற உள்ளது.

இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். மறக்காமல் அனைவரும் வரும் சனிக்கிழமை (23/04/2016) காலை 9.30 மணிக்கு தூதரகத்தில் உள்ள அரங்கத்திற்கு வந்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

யோகப் பயிற்சியின் சிறப்புகள் 

1.தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது. 

2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது. 

3.சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.

4.அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.

5.நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.