Breaking News
recent

மரணத்தைப் பரிசளிக்கும் குளிர்பானங்கள்...!


முன் காலங்களில் உணவுடன் நீர்தான் அருந்துவார்கள். ஆனால் இப்பொழுது கூடவே குளிர்பானங்கள் பலருக்கும் தேவைப்படுகிறது.
கோக்கோ கோலா, ஃபான்டா, ஸ்பிரைட் சோடா எனப் பல. போதாக்குறைக்கு இப்பொழுது Energy drinks ம் சேர்ந்துவிட்டன.
அந் நாட்களில் காய்ச்சல் வந்தால் ஒரு பார்லி கஞ்சி, வயிறுப் பொருமல் என்றால் ஒரு இஞ்சி காப்பி என அருந்துவார்கள். இப்பொழுது இனிப்பு குளிர் பானங்களின் தாக்கம் வெளி நாட்டினரைப்பார்த்து நம்மவருக்கும் அதிகரித்திருப்பதை காணமுடிகிறது.
முன்பு இரவு உணவுக்கு என வெளியே ஹோட்டலுக்கு சாப்பிடப் போனால் சூப் எடுப்பார்கள். இப்போது குளிர் பானங்கள்தான். மேலும் மற்றைய பானங்கள் (மது) பற்றி நான் பேசப்போவதில்லை.
இவற்றை அருந்துவதால் 2012 – 2013 இல், உலகளாவிய ரீதியில் 180,000 மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது என ஓர் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
அவற்றில்…
• நீரிழிவு நோயிலிருந்து 132.000 பேரும், (சுமார் 75%)
• இருதய நோய்களிலிருந்து (CVD) 44.000 மரணங்களும், மற்றும்
• புற்றுநோய் காரணமாக 6000 இறப்புகளும் ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
இனிப்புக் குளிர் பானங்களில் கலோரிப் பெறுமானம் அதிகம் உள்ளது. அவற்றை அருந்துவதால் உடல் எடை அதிகரிக்கிறது.
இதன் காரணமாக நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
இந்த இனிப்புக் குளிர் பானங்கள் என்றால் என்ன?
கீழே உள்ளவற்றைப் பாருங்கள். ஆனால் இவை மாத்திரமல்ல வேறு பலவும் இருக்கலாம்.
• கலோரி குறைப்புச் செய்யாத எல்லா குளிர் பானங்கள்
• இனிப்பூட்டப்பட்ட பழச்சாறுப் பானங்கள்
• ஸ்போர்ட்ஸ் பானங்கள்
• எனர்ஜிப் பானங்கள்
• இனிப்பூட்டப்பட்ட தேயிலைப் பானங்கள்
(Sugary drinks include, but are not limited to, the following types of drinks:
Non-diet carbonated beverages Fruit-ads such as lemonade, fruit punch, powdered fruit drinks, and fruit drinks containing less than 100% fruit juice
Sports drink, flavored waters, Energy drinks, Sweetened teas)
பொதுவாக 30 அவுன்ஸ் அளவுள்ள குளிர்பானத்தில் 15 முதல் 18 தேக் கரண்டி சீனி இருக்கிறது. இது 240 கலோரிகளைக் கொடுக்கிறது.
மேற் கூறியவற்றில் பெரும்பாலான மரணங்கள் மத்திய மற்றும் குறைந்தளவு வருமானங்கள் உள்ள நாடுகளிலேயே நிகழ்கின்றன.
அதாவது நமது இந்தியா போன்ற நாடுகளில் அமெரிக்க இருதய சங்கம் (American Heart Association ) கீழ்கண்ட பரிந்துரையைச் செய்துள்ளது.
The AHA recommends that adults don’t exceed 450 calories a day or 36 oz a week from sugar-sweetened beverages.
In a 2012 statement position statement, the AHA and American Diabetes Association stated that non-nutritive artificial sweeteners can be a tool to help people lower their added sugar and calorie intake, as long as they don’t eat extra calories to compensate for the lower calories in the diet drinks.
குறைந்த கலோரி இனிப்பூட்டிகள், கலோரி வலுவற்ற இனிப்பூட்டிகள், செயற்கை இனிப்புகள், (Low-calorie sweeteners, artificial sweeteners, and non caloric sweeteners) என போசாக்கற்ற இனிப்புகளை (Non-nutritive sweeteners) வகைப்படுத்துகிறது அமெரிக்க இருதயச்சங்கம்.
வளர்ந்த ஒருவருக்கான தினசரி கலோரித் தேவை 2500 ஆகும். பெண்களுக்கு 2000 கலோரிகள். இது தினமும் சாப்பிடும் சகல உணவு மற்றும் பானங்கள், நீராகாரம் அடங்கலாக யாவற்றிலிருந்து கிடைக்க வேண்டியதாகும்.
எனவே அத்தகைய இனிப்பான மென் குளிர் பானங்களிலிருந்து 450 கலோரிக்கு மேல் எடுக்கக் கூடாது என்கிறது. இது அமெரிக்கர்களுக்கான அறிவுரை. ஆனால், இந்தியர்களான நாமும் வெளி நாட்டினர் சொனால்தான் கேட்போம்.
நாம் அந்தளவு கலோரி கூட எடுக்கக் கூடாது. நமது உடலமைப்பு, இந்திய சீதோஸ்ண நிலை வித்தியாசமானது. நாம் மேலும் குறைந்தளவு எடுப்பதே உசிதமானது.
நீங்களும் உங்கள் குழந்தைகளும் எதிர்காலத்தில் மேற் கூறிய நோய்களுக்கு ஆட்பட்டு காலத்திற்கு முந்திய மரணங்களுக்கு ஆளாகக் கூடாது என்றால் இனிப்புச் செறிவு அதிகமான அத்தகைய குளிர் பானங்களை முற்றிலுமாக தவிருங்கள்.
நமது முன்னோர்கள் இளநீர், பதநீர், மோர் போன்றவற்றைப் பருகி ஆரோக்கியமாக வாழ்ந்ததை நினைத்துப்பாருங்கள்.
நாமும் மாறி நமது எதிர்கால சமுதாயத்தை நல்ல ஆரோக்கியமான சமுதாயமாக மாற்ற முயற்சிபோம். முடியுமா? என பொறுத்திருந்து பார்ர்போம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.