Breaking News
recent

வதைக்கும் வெயிலில் இருந்த தப்ப ஏசி அறையில் முடங்கினாலும் ஆபத்து மருத்துவர்கள் எச்சரிக்கை.!


தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 115 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் ஏசி இயந்திரங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 

அதே நேரத்தில் ஏசி அறையில் முடங்கி கிடப்பதும் ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது.  கடந்த 20 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. 

அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஈரப்பதம் குறைந்து வறண்ட தரைக் காற்று வீசுவதால் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது நீடிக்கும் என்ப.தம் அவர்களின் எச்சரிக்கையாகும். 

ஏசி இயந்திரங்களின் விற்பனை அதிகரித்துள்ளதோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏசி அறையில் இருந்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் தான். 


ஆனால் அதிக நேரம் குளு குளு அறையில் இருப்பதால் உடல் உபாதைகளிலிருந்து தப்பிக்க முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஏசி இயந்திரம் உபயோகத்தின் போது மீடியமாக அதாவது 23 வெப்பநிலையில் வைத்தால் அதே அளவை உபயோகித்து அறையை குளுமையாக்க வேண்டும். 

வெப்பநிலையை அடிக்கடி மாற்றியமைக்க கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மீறி அடிக்கடி வெப்பநிலை அளவை மாற்றினால் தோல் வியாதி உள்ளிட்ட பல நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். கத்தரி வெயில் துவங்கும் முன்பே இந்த கதி என்றால் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கினால் கதி என்ன என்று மக்கள் அச்த்தில் உறைந்துள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.