Breaking News
recent

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் திருத்திய கட்டணம் எவ்வளவு? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்.!


தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் திருத்திய கட்டணம் எவ்வளவுஎன்பது பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விதிகளின்படிதான் வசூல்
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கான திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டண விபரம் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதால் சில விளக்கங்களை அளிக்கவேண்டியதுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட கட்டணம் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள் 2008 என்ற விதிகளின்படியே சுங்கக்கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பாணையின்படிஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் அந்தக் கட்டணம் தானாக திருத்தப்படும்.
சதவீத உயர்வு
தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின்படிதற்போதைய நிதி ஆண்டுக்கான மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் அடுத்த ஆண்டுக்கான சுங்கக்கட்டண உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் தற்போதைய ஆண்டுக்கான கட்டணம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் மிகக் குறைவே. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெறும் சதவீதம்தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
42-ல் 20 மட்டுமே
ஆனாலும் கார்வேன்இலகு (எல்.சி.வி.) ரக வாகனங்களுக்கு பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அவற்றுக்கான உயர்த்தப்பட்ட கட்டணம் ரூ.என்ற வீதத்தில்தான் உள்ளது.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் கட்டணம் திருத்தப்படுவது என்பது நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. விதிகளுக்கு உட்பட்டு அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளிலும் அந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரைமொத்தமுள்ள 42 சுங்கச்சாவடிகளில் 20 சாவடிகளில் மட்டுமே இந்த திருத்தப்பட்ட கட்டணம் அமலுக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.