Breaking News
recent

குவைத்தில் மே 6ல் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி.!


குவைத் : குவைத்தில் மிஸ்க் அமைப்பின் சார்பில் மே 6-ஆம் தேதி குவைத்தில் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பஹத் அல் அஹ்மது ஏரியாவில் உள்ள மிஸ்க் தமிழ் குத்பா பள்ளியில் நடைபெறுகிறது.
பெருமானார் (ஸல்) அவர்களின் அற்புத ஆன்மீக விண்ணுலக பயணத்தின் சரித்திர நிகழ்வுகள் மற்றும் படிப்பினைகள் பற்றி மஜ்லிசின் உலமா பெருமக்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்கள். நிகழ்ச்சிக்கு மௌலானா டி.பி. அப்துல் லத்தீப் காசிமி தலைமை வகிக்கிறார்.
மௌலவி ரபீஸ் ஏ அஸீஸ் நளீமி மற்றும் மௌலவி ஏ.ஆர். அப்துன்னசீர் பாஸில் மன்பஈ உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதியும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.