Breaking News
recent

துபாயில் 2030ம் ஆண்டுக்குள் டிரைவர் இல்லாத வாகனங்கள்.!



துபாயில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்கா நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள போக்குவரத்துறை தொடர்பான மாநாடு தொடங்கியது.துபாய் உலக வர்த்தக மையத்தில் தொடங்கிய இம்மாநாட்டில் போக்குவரத்துறையை நவீனப்படுத்துதல், மேம்படுத்துதல் தொடர்பான அறிக்கைகள் சமர்பிக்கப்படுகிறது. 

மேலும் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுவதை தடுத்தல், காற்று மாசுபடுதலை தடுப்பது உள்ளிட்ட   பல்வேறு பணிகள் குறித்து மாநாட்டில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

இம்மாநாட்டையொட்டி டுவிட்டர் பக்கத்தில், துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகம்மது பின் ராஷித் பின் அல் மக்தூம் வெளியிட்டுள்ள செய்தியில்,  ‘‘துபாயில் வரும் 2030ம் ஆண்டுக்குள் 25 சதவீத கார்கள் டிரைவர் இல்லாத வகையில் இயக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.