Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டம் உள்பட மே 14 முதல் 20 வரை வெடி பொருட்கள் விற்பனைக்கு தடை அரசு ஆணை.!


அனைத்து மாவட்டங்களிலும் வருகிற மே 14 முதல் 20ம் தேதி வரை வெடி பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 14.05.2016 முதல் 20.05.2016 வரை வெடிபொருள் சட்ட விதி 1884-ன் கீழ் 

பெரம்பலூர் மாவட்டத்தில் வெடிபொருள் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் வெடிபொருள் கிட்டங்கிகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே 14.05.2016 முதல் 20.05.2016 முடிய பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்கள் மற்றும் கிட்டங்கிகள் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாட்களில் வெடிபொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் கிட்டங்கிகள் திறக்கக் கூடாது.

மேற்படி நாட்களில் உரிமம் பெறாத நபர்கள் வெடிபொருட்களை அண்டை மாவட்டம் / மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், உரிமம் பெற்றவர்கள் மேற்படி நாட்களில் வெடிபொருள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் வெடிபொருள் சட்டம் 1884-ன் கீழ் உரிமத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.