Breaking News
recent

100 சதவீதவாக்குப் பதிவை வலியுறுத்தி வி.களத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.!


வி.களத்தூர், அயன் பேரையூர் பகுதிகளில் 100 சதவீதவாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டது.

தமிழக அளவில் மே 16ம்தேதி நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலள்ள பெரம்பலூர்மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 100 சதவீ தம், நேர்மையான முறையில் வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. 


இதன்படி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் மற்றும் அயன் பேரையூர் கிராமப்பகுதிகளில் நேர்மையாக வாக்களிப்பதன் அவசி யம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத் தப்பட்டது. 

இதற்கு பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்தறை அலுவலர் தேவி கா ராணி தலைமை வகித்தார். இப்பேரணியின் போது வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வீடு வீ டாக வழங்கப்பட்டது. 

வி.களத்தூர் மற்றும் அயன் பேரையூர் பகுதிகளின் முக்கியத் தெருக்கள் வழியே 100சத வீதநேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி பொது மக்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி நிலை விழிப்புணர்வு குழுக்களைச் சேர்ந்தவர்கள் பேரணியாகச் சென்றனர்.

அப்போது அனைவரும், தவறாமல் வாக்களிக்க வேண்டும், விலை மதிப் பில்லாத வாக்கினை விற்கமாட் டோம்,அனைவரும் நேர்மையுடன் வாக்களிப் போம் என்பன போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய வாறும், பதாகைகளை ஏந்தியவாறும் சென்றனர். இப்பேரணியில் பொதுமக்களும், அலுவலர்களும் கலந்து கொண் ட னர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.