Breaking News
recent

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.!


சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் எப்.எம்.அல்தாஃபி அறிவித்துள் ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கடந்த தேர்தல்களில் சில அரசியல் இயக்கங்களை ஆதரித்துள்ளது. அந்த இயக்கங்களுக்காக களப் பணியாற்றினோம்.
 முஸ்லிம் சமு தாயத்துக்காக நாங்கள் முன் வைத்த கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக அளித்த உறுதி மொழியின் அடிப்படையில்தான், அந்தக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால், அந்தக் கட்சிகள் தேர்தலுக்கு பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. 
இதனால் இனிவரும் காலங்களில் எந்த அரசியல் கட்சியையும் தேர்தலின்போது ஆதரிப்பதில்லை என்று எங்கள் பொதுக்குழுவில் முடிவு செய் தோம். அதன்படி, இந்தத் தேர்த லில் எந்தக் கட்சியையும் ஆதரிப் பதில்லை என்று முடிவு செய்துள் ளோம். 
அதேநேரத்தில், எங்கள் அமைப்பில் உள்ளவர்கள், அவர் களுக்கு பிடித்தமான அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்றும் கூறியுள்ளோம்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நாங்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது உண்மையல்ல. நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை. 
விகி தாச்சார அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எங்களின் எண்ணம். அதற்கான காலம் கனியும்போது நாங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.