Breaking News
recent

வெளிநாடு சென்ற வாக்காளர்களால் பெரம்பலூரில் சரியும் வாக்கு சதவீதம்.!


பெரம்பலூர் மாவட்டத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள வாக்குச்சாவடிகளில்தான் மிகக்குறைவான வாக்குப்பதிவாகியுள்ளது. வெளிநாடு சென்ற வாக்காளர்களால் வாக்குசதவீதம் சரிந்தது.   

தமிழகத் தேர்தல் ஆணையம் 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100சதவீத வாக்குப்பதிவை எட்டுவதற்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆன்லைன் வாக்குப்பதிவை இன்னமும் நடைமுறைப் படுத்தாத நிலையில் வெளிநாடு, வெளிமாநிலம் சென்றவர்களின் வாக்குகளைப் பெறப்போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

வெளிநாடு சென்ற முஸ்லிம் வாக்காளர்கள் வசிக்கும் பகுதிகளே பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக்குறைந்த வாக்குப்பதிவு நடந்த வாக்குச்சாவடிகளாக உள்ளது. கடந்த 2014 தேர்தலே சாட்சியாக உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்(தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே உள்ளன.

இதில் பெரம்பலூர் சட்டமன்றத்தொகுதியில் கடந்த 2014ம்ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் ஊராட்சி, விளாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தான் மிக அதிகப்பட்சமாக 91.96 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 


இந்த வாக்குச்சாவடியில் 709 வாக்குகளில் 652 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதே போல் சத்திரமனை அரசு உயர்நிலைப்பள்ளியில் 727 வாக்கு களில் 668 வாக்குகள் பதிவாகின. இங்கு 91.88 சதவீதமும், செங்குணம் அரசுஉயர்நிலைப் பள்ளியில், 1020 வாக்குகளில் 933 வாக்குகள் என 91.47 சதவீதமும், சத்திரமனை அரசுத் தொடக்கப்பள்ளியில் 836 வாக்குகளில் 759 வாக்குகள் பதிவாகி, 90.79 சதவீதமும் பதிவாகின.

பெரம்பலூர் தொகுதியில் குறைந்த பட்சமாக பெரம்பலூர் மவுலானா மேல்நிலைப் பள்ளியில் 715 வாக்குகளில் 431 வாக்குகள் பதிவாகி, 60.28சதவீத வாக்குகளே பதிவாகின. 


அதேபோல், பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக் குச்சாவடி எண் 296ல் 60.70 சதவீதமும், வி.களத்தூர் வண்ணாரம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 63.04 சதவீதமும், பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 294ல் 63.06 சதவீதமும், வி.களத்தூர் வண் ணாரம்பூண்டி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 63.17சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 

மேலும் பெரம்பலூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி(63.47), ரோவர் மேல்நி லைப்பள்ளி(63.90), ஈச்சம்பட்டி இஸ்லாமிய மானிய தொடக்கப்பள்ளி(64.52) ஆகியவற்றில் 65சதவீதத்திற்குக் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

குன்னம் சட்டமன்றத் தொகுதியில் 2014ம்ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், குன்னம் அருகேயுள்ள அசூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 1020 வாக்குகளில் 926 வாக்குகள் என மிக அதிகப்பட்சமாக 90.78 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல், பனங்கூர் ஊராட்சிஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 427 வாக்குகளில் 387 வாக்குகள் என 90.63சதவீத வாக்குகள் பதிவாகின. 


சிறுகளத்தூர் அரசுத் தொடக்கப்பள்ளியில் 956 வாக்குகளில் 866 வாக்குகள் என 90.59சதவீத வாக்குகள் பதிவாகின. மிகக் குறைவாக லெப்பைக்குடிகாடு ஊராட்சிஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 626வாக்குகளில் 333வாக்குகள் என 53.19சதவீத வாக்குகளே பதிவாகின. அதே லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிஎண் 292ல் 1089வாக்குகளில் 604வாக்குகள் என 55.46சதவீத வாக்குகளே பதிவாகின.

மேலும் அதே லெப்பைக்குடிகாடு பள்ளி வாக்குச்சாவடி எண் 291ல் 1338 வாக்குகளில் 745வாக்குகள் என 55.68சதவீத வாக்குகளே பதிவாகின. முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 55.70 சதவீதமும், லெப்பைக்குடிகாடு அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 289ல் 56.37 சதவீதமும், அதே பள்ளியின் வாக்குச்சாவடி எண் 88ல் 56.71 சதவீதமும், லெப்பைக்குடிகாடு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 287ல் 57.69 சதவீதமும், வாக்குச்சாவடி எண் 286 ல் 58.43 சதவீதமும், லெப்பைக்குடிகாடு நடு நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண்285ல் 60.50 சதவீதமும், லெப்பைக்குடிகாடு மேல்நி லைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 284ல் 64.36 சதவீதமும் பதிவாகின.

இதன்படி கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் மவுலானாபள்ளி, ராமகிருஷ்ணா பள்ளி, வி.களத்தூர் வண்ணாரம்பூண்டி, ஈச்சம்பட்டி மானியப்பள்ளி என முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், குன்னம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தான் வாக்குசதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது. 


வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் சென்ற வாக்காளர்களாலேயே வாக்குசதவீதம் குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இப்படிப்பட்ட வாக்குச்சாவடிகளைக் கொண்டு 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்றத் துடிக்கும் தேர்தல் ஆணையம் இதற்காக என்னநடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தான் தற்போதைய கேள்விக்குறியாக உள்ளது.    
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.