Breaking News
recent

இண்டர்நெட் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி.!


இந்தியாவில் தொழில்நுட்ப பெருக்கத்தால் இண்டர்நெட்டின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, இந்நிலையில் AKAMAI TECHNOLOGIES நிறுவனத்தார் இந்தியாவில் இண்டர்நெட்டின் வேகம் குறித்து அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உலக அளவிலான இண்டெர்நெட் வேகம் பற்றிய ஆய்வில் இந்தியாவின் இண்டெர்நெட் வேகம் தான் ஆசியாவிலேயே மிகக் குறைந்தது என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
உலக சராசரி இண்டர்நெட் இணைப்பு வேகம் 23 மடங்காக உயர்ந்துள்ளது என்றும், சராசரி இணைப்பு வேகத்தில் ஆசியாவிலேயே தென் கொரியா 26.7Mbps என்ற வேகத்தில் முதலிடத்தில் உள்ளது, எனினும் ஆசிய-பசிஃபிக் வட்டாரத்திலேயே 2Mbps வேகத்தில் மிகவும் மெதுவான வேகமே இந்தியாவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்சநேர வேகம் கூட தென் கொரியாவின் சராசரி வேகம் அளவுக்கு ஈடாக முடியவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் அதிவேக மொபைல் இண்டெர்நெட் வேகத்தினை கொண்ட நாடாக இங்கிலாந்து 26.8Mbps வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது, 14Mbps வேகத்துடன் ஸ்பெயின் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.