Breaking News
recent

50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தரமற்ற கலப்பட பாலை குடிப்பதாக அதிர்ச்சி தகவல்.!


50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தரமற்ற கலப்படமான பாலை குடிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய அவர் நாட்டில் விற்பனை செய்யப்படும் 68 சதவீதம் பால் தரமற்றவை என்றம் தெரிவித்து அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர சான்று நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கலப்பட பாலை பருகுவதன் மூலம் ஆபத்தான நோய்கள் உருவாகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் கலப்பட பாலானது உடலுக்கு கேடு விளைவிக்கும் சோப்புத் தூள், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவை கலந்து விற்பனை செய்யப்பட்டு வருவதையும் கூறியுள்ளார். 

நவீன ஸ்கேனர் கருவி:

மேலும் பேசிய மத்திய அமைச்ர் ஹர்ஷவர்தன் நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் 40 வினாடிகளில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றார். மேலும் பாலில் எந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்பதையும் இந்த கருவி மூலம் துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்றார். 


ஒவ்வொரு எம்.பி.யும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நவீன ஸ்கேனர்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற அவர், ஒருமுறை சோதனை நடத்த 10 பைசா தான் செலவாகும் எனவும் குறிப்பிட்டார். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.