Breaking News
recent

மேற்கத்திய முஸ்லீம்களும் தமிழக முஸ்லிம் அமைப்புகளும்…!



உலகில் மிக அதிகமாக தீவிரவாதம் சார்ந்த விமர்சனங்கள் சந்திப்பவர்கள் மேற்கத்திய முஸ்லிம்கள்..நாளுக்கு நாள் அதிகரித்து வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அங்கு ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை சமூகத்தின் வெறுப்பு வளர காரணமாக உள்ளது..

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பத்திரிகையாளர் போர்வையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டுரை வரையும் சூழல் அதிகரித்து வருகிறது…

இவை அனைத்தும் இஸ்லாமிய மார்க்கம் பற்றிய புரிதல் குறைவு தான் காரணம் என்று நிதானமாக பதிலளிக்க முயற்சிக்காமல் கடுமையான வார்த்தைகள் மூலம் விமர்சனம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது…

ஆனால் பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் இங்கிலாந்து முழுவதும் உள்ள சுமார் 1750 பள்ளி வாசல்களில் Visit my Mosque என்று மாதம் ஒருமுறை பிறமத கோட்பாடுகளை பின்பற்றுபவர்களை வரவழைத்து மார்க்கம் பற்றியும், இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கம் சார்ந்த உயரிய விழுமங்களையும் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கூடவே லண்டன், பிர்மிங்காம், மான்செஸ்டர் உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள பள்ளி வாசல்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் Open Day என்று அறிவித்ததோடு இஸலாத்தை குறித்து அறிய விரும்புபவர்களுக்காக சிறப்பு தாஃவா நடைபெறுகிறது…

எனவே உரிய புரிதல் இல்லாமல் எழுதுபவர்கள் வருந்தி மறுபடியும் சரியாக எழுத தூண்டும் வகையில் நமது எதிர்ப்பு இருக்க வேண்டும்…

சகிப்புத்தன்மையை நல்லறங்களில் ஒன்றாக கற்றுத்தந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது உம்மத்துகள் சமூகத்தின் உள்ளேயும் வெளியேயும் சகிப்பற்ற சமூகமாக மாறி வரும் சூழல் வருத்தம் அளிக்கிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.