Breaking News
recent

இஸ்லாமியர்களை அரவணைப்பவரே அதிபராக வரவேண்டும் : அமெரிக்க பெரும்பான்மை மக்கள் அதிரடி கருத்து - பியூ சர்வே முடிவு.!


அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரவிருக்கிறது. அமெரிக்க அதிபராக யார் வந்தால் சரியாக இருக்குமென்று பியூ என்ற ஆய்வு நிறுவனம் மக்கள் மத்தியில் கருத்து கணிப்பு கேட்டது.

இதில் அமெரிக்காவின் பெரும்பான்மை மக்களின் கருத்தாக...

அமெரிக்க அதிபராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் அவர்கள் இஸ்லாத்தை இழிவு செய்பவராக இருக்கக்கூடாது என்றும் இஸ்லாமியர்களை அரவணைப்பவராக இருப்பவராக இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக உடலுக்கு காய்ச்சல், தலைவலி வந்தால் கூட ஏன் வந்தது, எதற்காக வந்தது என்று ஆய்வு நடத்தும் அளவுக்கு ஆர்வம் கொண்டவர்கள் அமெரிக்கர்கள்,

2002 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு இஸ்லாம் இந்த உலகுக்கு என்ன சொல்கிறது என்று அமெரிக்க மக்கள் திருக்குர்ஆனை ஆய்வு செய்ய தொடங்கினர். அதன்பிறகே அங்கு இஸ்லாத்தின் தாக்கம் ஏற்பட்டு மக்கள் சாரை சாரையாக இஸ்லாத்தை நோக்கி வந்தார்கள்.

2002 முதல் 2012 வரை 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் 1200 பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது. 10 வருடத்திற்கு 1200 பள்ளிவாசல் என்றால் ஆண்டுக்கு 120 பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 120 பள்ளிவாசல்கள் என்றால் வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய மதமாக இஸ்லாம் திகழ்கிறது.

பியூ நடத்திய சர்வேயிலும் அமெரிக்க மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளது அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.