Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி பிப்.6ல் நடைபெறுகிறது மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்.!


மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப் படி 2016ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி 20.01.2016 முதல் 06.02.2016 வரை நடைபெறுகிறது.
அது சமயம் 01.01.2016 தேதியன்று தகுதியான நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி போன்ற திருத்தங்களை மேற்கொள்ளவும், பெயர் நீக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக வருகின்ற 31.01.2016 ஞாயிற்று கிழமை மற்றும் 06.02.2016 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளா; புகைப்பட அடையாள அட்டையில் பிழைகள் ஏற்படுவதை தவிர்க்க www.elections.tn.gov.in/eregistration
என்ற இணையதளத்தில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல், முதலிய கோரிக்கைகளை பதிவு செய்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 
எனவே பொதுமக்கள் அனைவரும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது வண்ண புகைப்படம் ஒன்றினை கொண்டு வரவேண்டும்.
இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் பிரிண்ட் எடுத்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலா;களுக்கு விசாரணைக்காக அனுப்பப்படும். இணையதளம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து விசாரணை செய்வார்கள். அது சமயம் வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களை தவிர இதர நாட்களில் விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் இ-சேவை மையங்கள், புதுவாழ்வு திட்ட வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இயங்கும் கணினி மையம் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்காக கோரிக்கை ஒன்றுக்கு ரூ.10 -ம் பிரிண்ட் எடுக்க ஒரு பக்கத்திற்கு ரூ.3- ம் கட்டணம் செலுத்த வேண்டும். பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.