இணையப் பயன்பாட்டிற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சவூதி அரசு, இணையத்தைக் கண்காணிக்க புதிய துறை ஒன்றையும் நியமித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சவூதி அரசு, மோசமான வதந்திகளுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படும் எனவும், அதை விட சவுக்கடி, வீட்டுக் காவலில் வைத்தல், சிறை வாசம் மற்றும் அவர்களின் இணையத் தளங்களை முடக்குதல் போன்ற தண்டனைகளும் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கும் கருத்துக்காக மரண தண்டனை கொடுக்ககூடிய ஒரே ஒரு வளைகுடா நாடு சவூதி மட்டுமே என குற்றம் சாட்டியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை சவூதி அரசு செய்ய தவறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக