Breaking News
recent

நபி (ஸல்) காலத்தில் எழுதப்பட்ட குர்ஆன் பிரதி பேர்மிங்கம் பல்கலைக்கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.!


அல்குர்ஆனின் பழமையான பதிப்புகளில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்கம் பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப்பிரதிகண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. 

இக் குர்ஆரான் பிரதி ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

ஆனால், இதன் பக்கங்களை கார்பன் டேட்டிங் முறையில் ஆராய்ந்தபோது, அவை முன்பு கூறப்பட்டதைவிட பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டவை என்று தெரியவந்தது.

அதாவது முஹம்மது நபியின் காலகட்டத்தைச் சேர்ந்த ஒருவரால் இந்த குரான் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

உலக பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் பிரதி, ஆரம்ப கால அரபு மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் வசிக்கும் சுமார் 25 லட்சம் முஸ்லிம்களில் பத்து சதவீதத்தினர் பேர்மிங்கம் பிரதேசத்தில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.