Breaking News
recent

ஆன்லைன் விசா சேவை திருச்சி விமான நிலையத்தில் நாளை துவக்கம்.!



திருச்சி விமான நிலையத்தில் ஆன்லைன் விசா சேவை மையம் நாளை சுதந்திர தினத்தன்று துவங்கப்படும் என்று தெரிகிறது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவில் சுற்றுலா விசா பெற வேண்டும் என்றால் இந்திய தூதரகத்தை அணுகி ஆவணங்களை அளித்து 30 நாட்களுக்கு மேல் காத்திருந்து முழுமையான விசாரணைக்கு பிறகு விசா பெறுவது நடைமுறையில் இருந்து வந்தது.

இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு தயக்கம் காட்டினர்.
இதையடுத்து மத்திய அரசின் குடியுாிமை துறை வெளிநாட்டு பயணிகளின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைன் விசாவை அறிமுகம் செய்தது.

முதலில் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, ெபங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சின், கோவா ஆகிய 9 விமான நிலையங்களில் ஆன்லைன் மூலம் விசா பெறும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதை ெதாடர்ந்து மத்திய அரசு மேலும் சில விமான நிலையங்களில் ஆன்லைன் விசா வழங்கும் சேவையை அமல்படுத்த முனைப்பு காட்டியது.

அதன்படி ஜெய்ப்பூர், லக்னோ, கயா, அகமதாபாத், திருச்சி, அமிர்தசரஸ் விமான நிலையங்களில் ஆன்லைன் விசா வழங்க அனுமதி அளித்தது. 

இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் ஆன்லைன் விசா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் புதிய முனையத்தில் விமானநிலைய நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் 99 சதவீதம் முடிந்து ஆன்லைன் விசா பெற 4 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இதனால் நாளை 15ம் தேதி சுதந்திரதினத்தன்று விமானநிலைய ஆணையகுழும தலைவர் வத்சவா கலந்து ெகாண்டு ஆன்லைன் விசா மையத்தை திறந்து வைப்பார் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. 

 ஏற்கனவே 76 நாடுகளுக்கு ஆன்லைன் விசா வழங்கப்பட்டு வந்தது. தற்போது மேலும் 37 நாடுகளை இணைத்துள்ளனர். இதனால் இனிவரும் காலங்களில் 113 நாடுகளுக்கு ஆன்லைன் விசா வழங்கப்பட உள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.