Breaking News
recent

தமிழகத்தை குப்பைத்தொட்டியாக மாற்றும் கேரளா.!


''எப்படிப்பா உன் வீட்டு வாசல் மட்டும் பளிச்சுன்னு சுத்தமா இருக்கு?''

''அது பெரிய மேட்டரே இல்ல. நம்ம வீட்டு குப்பையை எதிர் வீட்டு ஓரம் கூட்டி தள்ளிட்டாபோவுது''

இந்த வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது கேரளா. இறைச்சிக் கழிவுகளை தமிழக எல்லையில் கொட்டி தமிழகப் பகுதிகளை குப்பைத் தொட்டியாக மாற்றும் ஈன செயலை கேரளா செய்கிறது.

சமீபத்தில் கேரளாவில் இருந்து இறைச்சிக் கழிவுகளை தமிழக எல்லையில் கொட்ட வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது புதிதல்ல. ஏற்கனவே, கன்யாகுமரி, திருநெல்வேலி, தேனீ போன்ற கேரளா எல்லை பகுதிகளில் கழிவுகளை திடீர் திடீரென கொட்டி, எல்லையோரத்தை குப்பை மேடாக்கி விட்டது கேரளா.

தேனி மாவட்டமானது தமிழக–கேரள மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து போடிமெட்டு, 

கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலை ஆகிய மலைச்சாலைகளின் வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. 

கேரள மாநிலத்தில் இந்த மலைச்சாலைகள் வழியாக மருத்துவ கழிவு பொருட்கள், கோழி இறைச்சி கழிவுகள், மாட்டு இறைச்சி கழிவுகள் மற்றும் பல்வேறு 

வகையான கழிவுகளை கொண்டு வந்து சிலர் கொட்டிச் செல்கின்றனர். இதனால் தேனி மாவட்டத்தில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

மேலும், தமிழக-கேரள எல்லையான வாளையார், வேலந்தாவளம், குப்பாண்டகவுண்டனூர், நடுப்பூணி, கோபாலபுரம், வளந்தாயமரம், செமணாம்பதி போன்ற தடங்கள் வாயிலாக, இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.

இதுபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகள் இதனால் துர்நாற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளன. 

செங்கோட்டையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆரியங்காவு பஞ்சாயத்து. இடையில் உள்ள 'கோட்டை வாசல்' என்னும் பகுதிதான் இருமாநிலத்தின் எல்லைப்பகுதி. 

கோட்டை வாசலை சுற்றி கட்டளை குடியிருப்பு, கேசவபுரம், புதூர், புளியரை என தமிழக கிராமங்கள் உள்ளன. 

இந்த பகுதிதான் தற்போது கேரள கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால், செழிப்பான செங்கோட்டை தாலுகா சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்குள் பொருட்கள் கொண்டு செல்லும் எல்லா வாகனங்களையும் சோதனைச்சாவடியில் சோதனை செய்து அனுப்புகின்றனர். 

ஆனால், கேரளாவில் இருந்து களியக்காவிளை பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் 

டெம்போக்கள் சோதனை சாவடிகளை கடந்து தமிழகத்திற்குள் வருகின்றன. இவைகளை தமிழக சோதனை சாவடியில் சரியாக சோதிப்பதில்லை.

இந்த கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைவதுடன் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக, கேரளாவில் இருந்து வரும் கழிவுகள் ஆறு, குளங்கள் மற்றும் ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் கொட்டப்படுகிறது. 

இதனால், தண்ணீர் மாசுபடுவதுடன் நிலத்தடி நீரும் பாழ்பட்டு நிலமும் கேடு அடைந்து விடுகிறது. 

இதனால், குடிநீர் தரும் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் அசுத்தம் இறங்கி குடிநீரும் சுகாதார கேடு அடைய வாய்ப்பு உள்ளது.

கேரள மாநிலத்தில் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட ஆபத்தான கழிவுகளைக் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மாநிலம் முழுவதும் சேகரிக்கப்படும் இறைச்சி கழிவுகள், மருத்துவ ரசாயனக் கழிவுகள், மக்காத குப்பைகள் உள்ளிட்டவை, 

லாரிகளில் மூட்டை மூட்டையாக எடுத்து வரப்பட்டு, அவை தமிழக எல்லைப் பகுதிகளில் புதைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், தமிழர்கள் சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு கழிவுகளை கேரளாவில் இருந்து லாரியில் ஏற்றி கொண்டு வந்து தமிழ்நாட்டில் உள்ள பகுதிகளில் கொட்டுகின்றனர். 

கொட்டு கொட்டு குப்பைகளை தமிழ் நாட்டில் - துட்டு துட்டு உனக்கு இந்த வேலைக்கு'' என கேரள செய்கிறது.

கேரளாவை கடவுளின் தேசம் என வர்ணிப்பார்கள். சுற்றுசூழல், இயற்கை வளங்களுக்கு கேரள மாநிலம் கொடுக்கும் 

முக்கியத்துவம்தான் இந்த பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதே கேரளம்,  தமிழகத்தை கழிவுகளின் தேசமாக மாற்றிக் கொண்டிருக்கிறது சத்தமில்லாமல்!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.