Breaking News
recent

துபாய் மற்றும் வளைகுடாவில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகளின் கவணத்திற்கு.!


துபாய் மற்றும் வளைகுடாவில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகளின் கவணத்திற்கு.

வளைகுடா வாழ் தமிழ் சகோதரர்கள் இந்திய விமானங்கள் விட இந்த ஸ்ரீ லங்கா ஏர் லைன்ஸ் அதிகம் பயனம் செய்வார்கள். பலவிதமான காரணங்கள் உள்ளன. 

அதில் குறிப்பாக வளைகுடா நாட்டிலிருந்து திருச்சி செல்ல வசதி உள்ளது.

இந்த விமானம் இந்தியா விமானங்கள் விட சர்விஸ் நன்றாக உள்ளன. மேலும் 40 கிலோ + ஹன்ட் லக்கெஜ் 10- 15 கிலோ எடுத்து செல்லலாம். 

டூட்டி ப்ரீ யிலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாமன் வாங்கி செல்லலாம்.

ஆனால் தற்போது போட்டிங் கார்டில் 7 கிலோ மட்டுமே அனுமதி என்றும் டூட்டி ப்ரீ ஷாப் உள்பட என பிரிண்ட் அடித்து தருகின்றார்கள்.

மேலும் துபையில்(வளைகுடா நாட்டில் உள்ள விமான நிலையத்தில்) செக்குரிட்டியை நாம் ஏமாற்றி சென்றாலும் கொழும்பு  TO திருச்சி அல்லது சென்னை செல்லும் விமானத்தில் பிடித்து விடுகின்றார்கள். 

அங்கு டூட்டி கட்டு அல்லது சாமன் எடுத்து  வெளியே தூக்கி போடு என கட்டாயப்படுத்துகின்றனர்
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றன.

ஏற்கனவே இந்த விமானத்தில் ஜம் ஜம் தண்ணீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிட்ட தக்கது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊர் சென்ற எனது நண்பர் 9கிலோ ஹேண்ட் லக்கேஜ்ஜும் 39.65 லக்கேஜ்ஜும் எடுத்து சென்றார்.

ஸ்ரீலங்கா விமான நிலையத்தில் ஹேண்ட் லக்கேஜ்ஜை எடை போட்டு பார்த்து இரண்டு கிலோவுக்கு பணம் கட்ட சொல்லி இவரும் கட்டி விட்டார்.

அந்த விமானத்தில் சென்ற அனைவருமே எக்ஸ்ட்ரா ஹேண்ட் லக்கேஜ்ஜுக்கு பணம் கட்டி சென்றுள்ளனர். 

வளைகுடாவில் கண்டு கொள்ளாமல் விட்டு,விட்டு ஸ்ரீலங்காவில் மடக்கி விடுகின்றனர். 

பொருட்களை எடுத்து வெளியிலும் போட முடியாமல், பணமும் கட்ட முடியாமல் திணறிய சில பயணிகளும் தடுமாறுவதுண்டு. 

கையில் பணமில்லை என்றால் சென்னை, மதுரை, திருச்சி இந்த விமான நிலையங்களில் பணம் கட்டினால் மட்டுமே ஹேண்ட் லக்கேஜ் கொடுப்பார்களாம்.

இந்த சிரமத்தை தவிர்க்க வேண்டுமென்றே உங்களின் நலம் கருதி இந்த பதிவு.



VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Kumar.v சொன்னது…

கவனம் என்றுதான் பதியவேண்டும் .கவணம் என்று அல்ல

Blogger இயக்குவது.