Breaking News
recent

yahoo ஒன் டைம் பாஸ்வேர்ட் வந்தாச்சு.!


காதலன் காதலி பேரை குழந்தைக்கு பேரு வச்சது போக அடுத்து அதிகமா யூஸ் ஆகும் இடம் ஈமெயில் பாஸ்வோர்ட்கள் தான். 

இப்ப தினமும் பல காதல்கள் கிடைப்பதால் இந்த மெயில் ஐடிக்கு எந்த காதலி பாஸ் வேர்ட் என்பதே மறக்கும் அளவுக்கு கலி முத்திடுத்து. 

இதற்க்கு முற்றுபுள்ளி வைக்க நமக்கு மிக பரிச்சியமான ஒடிபி என்னும் ஒன் டைம் பாஸ்வோர்ட் சிஸ்டத்தை இப்போது யாகூ நிறுவனம் வரும் காலங்களில் 

மின்னஞ்சல் மற்றும் பிற யாகூ சர்வீஸ்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டது.. இது என்ன?

இது வரை நாம் மின்னஞ்சல் அனுப்ப முதலில் லாகின் செய்வோம் நிறைய பேர் பாஸ்வோர்ட்டை நினைவில் வைக்காமல் ஃபர்காட் பாஸ்வோர்ட் அடிக்கடி யூஸ் செய்து திறப்போம் 

அல்லது எளிதான பாஸ்வோர்ட்டை வைத்து அது கடைசியில் ஹேக்கிங்கில் முடியும். 

இது போல பல பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வண்ணம் பாஸ்வோர்ட் டெக்னாலஜியை இன்னும் அட்வான்சாக செய்ய முடியுமா 

என்று ஒவ்வொரு கம்பெனிகளும் ஆராய்ச்சியில் இறங்க யாகூ இதற்க்கு முன் மாதிரியாய் ஒடிபி வகை பாஸ்வோர்ட்களை 

அறிமுகபடுத்தியிருப்பது மகிழ்ச்சி.
இதன் மூலம் நீங்கள் யாகூ சைட்டு சென்ற உடன் உங்கள் யூஸர் ஐடியை மட்டும் போட்டால் 

போது உடனே 10 வினாடிக்குள் உங்கள் மொபைலுக்கு பாஸ்வோர்ட் வரும் அதை வைத்து மின்னஞ்சல் பகுதியை திறக்கலாம். 

அது மட்டுமல்ல ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு புது பாஸ்வோர்ட் வரும் என்பதால் உங்கள் அக்கவுன்ட்டை ஹேக் செய்ய இயலாது. 

அது போக நீங்கள் அனுப்பும் ஈமெயிலை கூட முழுவது பாஸ்வோர்ட் வைத்து அனுப்பிவிட்டு அனுப்பிய நபருக்கு இது தான் பாஸ்வோர்ட் என்று ஃபோனிலோ அல்லது மெசேஜ் அனுப்பினால் 

அவர்கள் அதை வைத்து மட்டும் தான் அந்த மின்னஞ்சலை திறக்க முடியும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

பாஸ் யாஹூ எல்லாம் சங்கூதுற வயசில சங்கீதா மாதிரி பாஸ் – நாங்கெல்லாம் ஜிமெயில்க்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்திட்டோம்னு நீங்க புலம்பினா – நாமெல்லாம் 

யாகூ சாட் என்னும் ஆரம்ப பாடசாலையில் பயின்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.