Breaking News
recent

ஏர்வாடியில் மொகரம் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு!!



ஏர்வாடியில் பாரம்பரியமாக நடந்து வந்த மொகரம் பண்டிகை சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு கோர்ட் உத்தரவையடுத்து இந்த ஆண்டு காவல்துறை அனுமதி மறுத்தது. இஸ்லாமிய பெண்கள் வழக்கம்போல் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு சென்று நேர்ச்சையில் ஈடுபட்டனர்.
ஏர்வாடியில் கடந்த 200 ஆண்டுக்கும் மேலாக மொகரம் பண்டிகையை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் நடந்து வந்தது. 10 நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7வது நாள் பஞ்சா எடுக்கும் நிகழ்ச்சியும் (குதிரை மீது பவனி வருதல்), 9 மற்றும் 10வது நாளில் ஏர்வாடி 6வது தெரு மற்றும் லெப்பை வளைவு தெரு ஆகிய இடங்களில் சந்தனக்கூடு சந்திக்கும் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்தன.
மொகரம், இஸ்லாத்திற்கு எதிரான நிகழ்ச்சி என்று ஏர்வாடி முஸ்லிம் ஜமாத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரம்பரியமாக நடத்தப்படும் நிகழ்ச்சியை நிறுத்தக் கூடாது என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஒரு தரப்பினர் விழா நடத்த தடை ஆணை பெற்றுள்ளனர்.இந்நிலையில் ஏர்வாடியில் மொகரம் பண்டிகை கடந்த 25ம்தேதி கொடியேற்றுடன் தொடங்கியது. நிறைவு நாளில் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
சட்டம்&ஒழுங்கு பிரச்னைக்கு ஏற்ப முடிவு எடுக்குமாறு போலீ சாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் சந்தனகூடு ஊர்வலத்திற்கு நாங்குநேரி டிஎஸ்பி அனுமதி மறுத் தார். இதனால் இந்தாண்டு ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறவில்லை.
பாரம்பரியமாக நடந்து வந்த விழா இந் தாண்டு நடத்தப்படாத தால் ஒருதரப்பினர் அதிருப்தி அடைந்துள்ள னர். இஸ்லாமிய பெண்கள் வழக்கம்போல் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு சென்று நேர்ச்சையில் ஈடுபட்டனர்.
ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம் நிறுத்தப்பட்டதால் 6ம் தெரு சாவடி முன்பாக வைக்கப்பட்டுள்ள சந்தனக்கூடை இளைஞர்கள் சோகத்தோடு பார்த்து செல்கின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.