Breaking News
recent

துபாயில் 5 தீவிரவாத இயக்கங்களுக்குத் தடை!




வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்டில் பாகிஸ்தானின் 5 குழுக்கள் உள்பட 86 தீவிரவாத இயக்கங்களுக்கு தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டின் அமைச்சரவை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது, ஹக்கானி ஒருங்கிணைப்பு குழு, லஸ்கர்–இ தொய்பா உள்ளிட்ட 5 தீவிரவாத இயக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இதை மீறி, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில், அல்கொய்தா, சிரியாவில் அந்நாட்டு அதிபர் பசார் அல்–ஆசாத்துக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டுள்ள நுஸ்ரா முன்னணி, ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஆகியவையும் அடங்கும்.

ஐக்கிய அரபு எமிரேட்டின் அதிபர் ஷேக் காலிபா பின் சயீத் அண்மையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டின் அமைச்சரவை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.