Breaking News
recent

ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு ஆகக்கூடுதல் நிதி வழங்குவது சவூதி அரேபியா!



ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு ஆகக் கூடுதல் நிதி வழங்கும் நாடாக சவூதி அரேபியா தொடர்ந்தும் திகழ்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்கான் ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி இப்ராஹிம் ஜவ்தத் அல் சிக் கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 69 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் விதமாக றியாத் நகரில் நடந்த நிகழ்வு ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வதிவிடப்பிரதிநிதி சவூதி அரேபியா ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித நேய திட்டங்களுக்கு உலகளாவிய ரீதியில் ஆகக்கூடுதலான நிதியுதவியை வழங்குவதோடு ஆபிரிக்க நாடுகளுக்கு தொழிநுட்ப உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு ஈராக்கில் முன்னெடுக்கும் மனித நேய திட்டங்களுக்கு 1.8 பில்லியன் சவூதி ரியால்களையும் காசாவில் மேற்கொள்ளப்படும் புனர் நிர்மாண பணிகளுக்கு 1.8 பில்லியன் ரியால்களையும் சிரிய அகதிகளுக்காக 750 மில்லியன் ரியால்களையும் வழங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக போலியோ நோய் அகற்றல் திட்டங்களுக்கும் பாரிய நன்கொடைகளை வழங்கியுள்ளது.
சவூதி அரேபியா விவசாய திட்டங்களுக்கு அதிகளவான தொழில் நுட்ப உதவிகளை வழங்குகின்றது. பேரீச்சம்பழ செய்கையும் இதில் உள்ளடங்குகிறது. அதிகமான நாடுகள் சவூதியின் ஹஜ் முகாமை நெறிகளை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக இப்ராஹிம் ஜவ்தத் மேலும் தெரிவித்தார். மில்லியன் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது ஒரு அற்புதமான விடயம் என அவர் தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.